ஆந்திர அரசு, விசாகப்பட்டினத்தில் அலுவலகம் அமைக்க TCS நிறுவனத்திற்கு 99 பைசாவிற்கு 21.6 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது. இதன் மூலம் 12,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திர அரசு, விசாகப்பட்டினத்தில் அலுவலகம் அமைக்க டாடா குழுமத்தின் TCS நிறுவனத்திற்கு 99 பைசாவிற்கு 21.6 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது பெங்களூரு ஐடி மையத்திற்கு போட்டியாக பார்க்கப்படுகிறது. TCS நிறுவனம் இந்த நிலத்தில் அலுவலகம் அமைத்து, ரூ.1370 கோடி முதலீடு செய்யவுள்ளது.

டிசிஎஸ் நிறுவனம்

இதன் மூலம் அடுத்த 2-3 ஆண்டுகளில் 12,000 வேலைவாய்ப்புகள் உருவாகும். ஐடி அமைச்சர் நாரா லோகேஷ் இத்திட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெங்களூருவில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டபோது, ஆந்திர அரசியல்வாதிகள் ஐடி நிறுவனங்களை ஆந்திராவிற்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். ஆனால் எந்த நிறுவனமும் பெங்களூருவை விட்டு வெளியேறவில்லை. இதனால், ஆந்திர அரசு தற்போது சலுகைகள் மூலம் ஐடி நிறுவனங்களை ஈர்க்க முயற்சிக்கிறது.

மோடி முன்னுதாரணம்:

குஜராத் முதல்வராக இருந்தபோது, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சநந்த் நகரில் 99 பைசாவிற்கு நிலம் வழங்கியதைப் போலவே, ஆந்திர அரசும் இதேபோல் செயல்பட்டுள்ளது. இதன் மூலம் குஜராத்தில் தொழில் வளர்ச்சி அதிகரித்தது. ஆந்திர அரசின் இந்த நடவடிக்கையை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

H-1B விசா, கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு டிரம்ப் போட்ட புதிய உத்தரவு!