H-1B விசா, கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு டிரம்ப் போட்ட புதிய உத்தரவு!
அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் அனைவரும் கூட்டாட்சி அரசாங்கத்தில் பதிவு செய்து ஆவணங்களை கைவசம் வைத்திருக்க வேண்டும். டிரம்ப் நிர்வாகத்தின் புதிய விதிமுறைக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது, இது H-1B விசா வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும்.

H-1B visas need to carry ID proof
அமெரிக்காவில் புலம்பெயர்ந்த மக்கள்:
புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் மக்கள் அனைவரும், அமெரிக்காவின் கூட்டாட்சி அரசாங்கத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் அந்த ஆவணங்களை 24 மணிநேரமும் கைவசம் வைத்திருக்க செல்ல வேண்டும்.
அமெரிக்காவில் வசிக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோர் தொடர்பாக டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்துள்ள இந்த புதிய விதிமுறைக்கு அமெரிக்க மாவட்ட நீதிபதியிடமிருந்து வெள்ளிக்கிழமை ஒப்புதல் கிடைத்ததுள்ளது.
Trump on H-1B visas
24x7 ஆவணம் இருக்க வேண்டும்:
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அமெரிக்கக் குடிமக்கள் அல்லாத அனைவரும் இந்த ஆவணத்தை எல்லா நேரங்களிலும் எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"சட்டவிரோதமாக நம் நாட்டில் தங்கியிருப்பவர்களுக்கு அதிபர் டிரம்பும் நானும் ஒரு தெளிவான செய்தியை வைத்திருக்கிறோம். இப்போதே வெளியேறுங்கள். நீங்கள் இப்போதே வெளியேறினால், திரும்பி வந்து முறையாக சுதந்திரத்தை அனுபவிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். டிரம்ப் நிர்வாகம் அனைத்து குடியேற்றச் சட்டங்களையும் அமல்படுத்தும் - குறிப்பிட்ட சட்டங்களை மட்டும் அமல்படுத்துவோம் என்று இருக்க மாட்டோம். அனைத்து அமெரிக்கர்களின் பாதுகாப்பிற்காக நமது நாட்டில் யார் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்," என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலாளர் கிறிஸ்டி நோயம் கூறினார்.
USA Green Card
இந்தியர்களுக்கும் பொருந்தும்:
செல்லுபடியாகும் விசாக்கள், கிரீன் கார்டுகள், எல்லை கடக்கும் விசா அல்லது I-94 சேர்க்கை பதிவுகள் ஆகியவற்றை வைத்திருக்கும் அனைத்து விதமான குடியேறிகளும் தங்கள் பதிவு ஆவணங்களை எப்போதும் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த உத்தரவு H-1B விசா மற்றும் கிரீன் கார்டு பெற்று அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கும் பொருந்தும்.
அமெரிக்க குடிமக்களாக இல்லாமல் அமெரிக்காவில் வசிப்பவர்கள் எல்லோரும் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று குடியேற்றச் சட்டம் கோருகிறது. சட்டவிரோதமாக வசிப்பவர்களும் பதிவுசெய்ய வேண்டும் என்ற விதி உள்ளது.
Donald Trump
இதுவரை செயல்படாத சட்டம்:
இந்தச் சட்டம் 1940 ஆம் ஆண்டு ஏலியன் பதிவுச் சட்டத்தில் இருந்து தோன்றியவை என்று கூறப்படுகிறது. அது இரண்டாம் உலகப் போரின் ஆரம்ப நாட்களில் குடியேறிகள் மற்றும் நாசவேலைகளில் ஈடுபடுபவர்கள் குறித்த அச்சங்களுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட சட்டம் ஆகும்.
ஆனால் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்பவர்கள் பதிவு செய்ய வேண்டும் என்ற தேவை அரிதான சூழ்நிலைகளில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், 1940 களில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இது பயன்படுத்தப்படவில்லை என்று அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.