டிசிஎஸ் நிறுவன சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் திடீர் ராஜினாமா... அடுத்த சிஇஓ இவர்தானாம்!!
டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து டிசிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்துடன் கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாகவும், கடந்த 6 ஆண்டுகளாக நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக வெற்றிகரமாக செயல்பட்ட ராஜேஷ் கோபிநாதன் தனது பிற நலன்களை கருத்தில் கொண்டு டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா... தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்!!
வங்கி, நிதி சேவைகள் மற்றும் இன்சூரன்ஸ் வணிக குழுமத்தின் உலகளாவிய தலைவருமான கிருதிவாசன் உடனடியாக டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இன்று (மார்ச் 16 ம் தேதி) முதல் அமலுக்கு வரும் வகையில் கிருத்திவாசனை சிஇஓ-வாக நியமனம் செய்ய நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து ராஜேஷ் கோபிநாதனுக்கு பதிலாக கிருத்திவாசன் அடுத்த நிதியாண்டில் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐஎன்எஸ் துரோணாச்சார்யாவிற்கு குடியரசுத் தலைவர் பதக்கம்.. வழங்கினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!!
மேலும் ராஜேஷ் கோபிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசிஎஸ்ஸில் எனது 22 ஆண்டுகால பணியை நான் முழுமையாக அனுபவித்து மகிழ்ந்தேன். இந்தக் காலகட்டம் முழுவதும் எனக்கு வழிகாட்டியாக இருந்த சந்திராவுடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிறுவனத்தை வழிநடத்திய கடந்த ஆறு வருடங்கள், 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயையும், சந்தை மூலதனத்தில் 70 பில்லியன் டாலருக்கும் அதிகமான அதிகரிப்பையும் சேர்த்தது, மிகவும் செழுமையாகவும் நிறைவாகவும் இருந்தது என்று தெரிவித்துள்ளார்.