Asianet News TamilAsianet News Tamil

ஐஎன்எஸ் துரோணாச்சார்யாவிற்கு குடியரசுத் தலைவர் பதக்கம்.. வழங்கினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!!

குடியரசுத் தலைவர் ஐஎன்எஸ் துரோணாச்சாரியாவுக்கு குடியரசுத் தலைவர் பதக்கத்தை வழங்கினார்

President droupadi murmu-presented the president colour to ins dronacharya
Author
First Published Mar 16, 2023, 9:17 PM IST

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஐஎன்எஸ் துரோணாச்சாரியாவுக்கு குடியரசுத் தலைவர் பதக்கத்தை வழங்கினார். கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஐஎன்எஸ் துரோணாச்சார்யாவிற்கு குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கினார். ஐஎன்எஸ் துரோணாச்சார்யாவுக்கு மிக உயர்ந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.  இந்திய கடற்படை கன்னேரி பள்ளியின் ஐஎன்எஸ் துரோணாச்சார்யாவுக்கு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவால் குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா... தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்!!

பின்னர் பேசிய அவர், இந்தியாவின் மூலோபாயப் படைகளில் இந்திய கடற்படை மிக முக்கியமானது. ராணுவம், பொருளாதாரம் மற்றும் வணிக நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய கடற்படையின் பங்கு மிக முக்கியமானது. இந்தியா போன்ற நீண்ட கடற்கரை மற்றும் தீவுகளை கொண்ட ஒரு நாட்டிற்கு நவீன மற்றும் சக்திவாய்ந்த கடற்படை தேவை. இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திரம் அதன் எதிரிகளிடமிருந்து பல சவால்களை எதிர்கொண்டது.

இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீர் அந்தஸ்தை மீட்டெடுக்க எதிர்கட்சிகள் கூட்டம்… தேர்தல் நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு!!

அதுமட்டுமல்லாமல், நாட்டின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பங்களித்தது. கடல் எல்லைகளையும், வர்த்தக வழிகளையும் பாதுகாத்து, பேரிடர் காலங்களில் உதவும் இந்திய கடற்படையால் இந்தியா பெருமை கொள்கிறது. இந்திய கடற்படை பல வழிகளில் வளர்ச்சியடைந்து அதன் திறன்களை அதிகரித்துள்ளது. எந்த ஆபத்தையும் முன்கூட்டியே எதிர்கொள்வது இந்திய கடற்படை தான் என்று தெரிவித்துள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios