Asianet News TamilAsianet News Tamil

ராஞ்சி மருத்துவக்கல்லூரியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் எரித்து படுகொலை..!

நாமக்கல் மாவட்டத்தை மதியழகன். கட்டிட தொழிலாளி. இவரது மகன் மதன்குமார்(28). இவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவக்கல்லூரியில் தடயவியல் மருத்துவ மேற்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்தார். 

Tamilnadu medical student murdered in jharkhand tvk
Author
First Published Nov 3, 2023, 1:05 PM IST | Last Updated Nov 3, 2023, 1:13 PM IST

ராஞ்சியில் உள்ள ஆர்ஐஎம்எஸ் மருத்துவகல்லூரி விடுதியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டத்தை மதியழகன். கட்டிட தொழிலாளி. இவரது மகன் மதன்குமார்(28). இவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவக்கல்லூரியில் தடயவியல் மருத்துவ மேற்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், திடீரென மாயமான மதன்குமாரை சக மாணவர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது விடுதியின் பின்புறத்தில் பாதி எரிந்த நிலையில் மாணவர் மதன்குமார் உடல் கண்டெடுக்கப்பட்டது. 

இதையும் படிங்க;- திருமணமான 3 நாட்களில் காதல் தம்பதி வீடு புகுந்து வெட்டி படுகொலை.. காரணம் என்ன? கைதான தந்தை பகீர் தகவல்!

Tamilnadu medical student murdered in jharkhand tvk

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து மதன்குமாரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அவரது அறைக்குச் சென்று போலீசார் ஆய்வு நடத்தினர். 

இதையும் படிங்க;-  நடத்தையில் தீராத சந்தேகம்.. எந்நேரமும் ஓயாத சண்டை.. ஆத்திரத்தில் மனைவியை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த கணவர்.!

Tamilnadu medical student murdered in jharkhand tvk

இதுதவிர சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் வெளியான பிறகு தான் மதன்குமார் உயிரிழப்பு கொலையா? அல்லது தற்கொலையா?  என்பது தெரியவரும். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மருத்துவக்கல்லூரிக்கு மேற்படிப்பு படிக்க சென்ற மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios