டெல்லியில் இருக்கும் நிஜாமுதீன் பகுதியில் கடந்த மார்ச் மாதம் தப்லிக்  ஜமாத் என்கிற இஸ்லாமிய அமைப்பு இஸ்லாமிய மதகுருக்கள் பங்கேற்ற மாநாடு ஒன்றை நடத்தியது. அதில் தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். மேலும் இக்கூட்டத்தில் வெளிநாடுகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிலையில் தப்லிக் ஜமாஅத் நடத்திய மாநாட்டில் பங்கேற்றவர்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தற்போது உறுதியாகியிருக்கிறது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி இருக்கும் நிலையில் அங்கும் மக்களுக்கு கொரோனா பரவுதல் ஏற்பட்டிருக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்களை மத்திய மாநில அரசுகள் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களில் பலரை கண்டுபிடித்து மருத்துவ பரிசோதனை செய்து தனிமை சிகிச்சையில் வைத்துள்ளனர்.

கொடூர கொரோனாவின் முடிவு காலம் நெருங்கி விட்டது..! நம்பிக்கை தரும் நோபல் பெரிசு பெற்ற விஞ்ஞானி..!

இந்த நிலையில் நிஜாமுதின் தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற சிலர் டெல்லி காசியாபாத் பகுதியிலிருக்கும் எம்எம்ஜி மருத்துவமனையில் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கின்றனர் .அவர்களுக்கு அங்கு பணியிலிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அங்கு தனிமை சிகிச்சையில் இருக்கும் மாநாட்டு பங்கேற்பாளர்கள் சிலர் நேற்று செவிலியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும் மருத்துவமனை வளாகத்திற்குள் அத்துமீறி சுற்றியும் ஊழியர்கள் மீது உமிழ்ந்தும் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் காவல் துறையில் புகார் அளித்திருக்கிறது. இதையடுத்து மருத்துவமனையில் நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டதாக தப்லிக் ஜமாஅத் நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அவர்கள் 6 பேரும் எம்எம்ஜி மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருக்கின்றனர்.

கொரோனாவின் பிடியில் 16 நகரங்கள்..! எச்சரித்த மத்திய அரசு..! தமிழ்நாட்டில் எந்த ஊர் தெரியுமா..?