50 பேருடன் அந்தரத்தில் சுழன்ற ராட்டினம் தரையில் விழுந்து விபத்து.. 16 பேர் படுகாயம்; உரிமையாளர் எஸ்கேப்..!
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடந்து வந்த கண்காட்சியில் சுற்றிக் கொண்டிருந்த ராட்டினம் திடீரென கழன்று விழுந்தது. இந்த ராட்டினத்தில் 50 பேர் இருந்தனர். இவர்களில் 16 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 50 அடி உயரத்தில் இருந்து இந்த ராட்டினம் பலத்த சத்தத்துடன் விழுந்தது.
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடந்து வந்த கண்காட்சியில் சுற்றிக் கொண்டிருந்த ராட்டினம் திடீரென கழன்று விழுந்தது. இந்த ராட்டினத்தில் 50 பேர் இருந்தனர். இவர்களில் 16 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 50 அடி உயரத்தில் இருந்து இந்த ராட்டினம் பலத்த சத்தத்துடன் விழுந்தது.
காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ராட்டினத்தில் குழந்தைகள், பெண்கள் இருந்தனர். இந்த சோக சம்பவத்தை அடுத்து, கண்காட்சிக்கு ஏற்பாடு செய்து இருந்த அமைப்பாளர் மற்றும் ராட்டின உரிமையாளர் மீது மொகாலி போலீசில் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரும் தலைமறைவாகி உள்ளனர்.
இதையும் படிங்க;- Viral video : அந்தரத்திலிருந்து சரிந்து விழுந்து விழும் ராட்சத சுழலும் ராட்டினம்! - பதபதைக்கும் காட்சி!
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ராஜேஷ் கூறுகையில், ''கண்காட்சி அமைப்பாளர் மற்றும் ராட்டின உரிமையாளர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த நேற்று இரவு முதலே அவர்கள் தலைமறைவாக இருக்கின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.
''கண்காட்சி நடத்துவதற்கு செப்டம்பர் 4ஆம் தேதி வரை மட்டும்தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கண்காட்சி நடந்த இடத்தில் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறும் என்ற அறிவிப்பை வைத்துள்ளனர். தவறை செய்தவர்கள் யாராக இருந்தாலும், தப்பிக்க முடியாது. கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்'' என்று டிஎஸ்பி ஹர்சிம்ரன் சிங் பால் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- ரேஷன்பொருள் மக்களோட வரி பணத்துல வாங்குறது.. நீங்க ஒன்னும் தானமா கொடுக்கல- நிர்மலா சீதாராமனை சாடிய பிரகாஷ் ராஜ்