Asianet News TamilAsianet News Tamil

ரேஷன்பொருள் மக்களோட வரி பணத்துல வாங்குறது.. நீங்க ஒன்னும் தானமா கொடுக்கல- நிர்மலா சீதாராமனை சாடிய பிரகாஷ் ராஜ்

Prakash Raj : தெலங்கானாவில் ரேஷன் கடை ஒன்றில் ஆய்வு செய்தபோது அங்கு மோடியின் புகைப்படம் இடம்பெறாததை கண்டித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நடிகர் பிரகாஷ் ராஜ் சாடி உள்ளார்.

Prakash Raj Slams Nirmala sitharaman for her ration shop raid
Author
First Published Sep 3, 2022, 3:50 PM IST

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானாவின் கம்மாரெட்டி மாவட்டத்தில் உள்ள பீர்கூர் நகருக்கு சென்று, அங்குள்ள  ரேஷன் கடையில் நேற்று திடீரென ஆய்வு நடத்தினார். அப்போது அந்த ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்கப்படாததை அறிந்த அவர், அம்மாவட்ட ஆட்சியரை அழைத்து ஏன் பிரதமரின் புகைப்படம் இல்லை என கண்டித்தார்.

மேலும் மோடியின் புகைப்படம் இடம்பெற்று இருப்பதை நீங்கள் தான் உறுதிசெய்ய வேண்டும் என கூறிய அவர், அவை அங்கிருந்து அகற்றப்படாமல் இருக்க நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவு தாணியங்களின் 80 சதவீத பங்கு மத்திய அரசினுடையது எனவும் அவர் கூறி இருந்தார். 

இதையும் படியுங்கள்... Subramanian Swamy: sitharaman: மோடி படம் இல்லாத ரேஷன் கடை: நிர்மலா சீதாராமனுக்கு சுப்பிரமணியன் சுவாமி கண்டனம்

நிர்மலா சீதாராமனின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜகவை சேர்ந்த சுப்ரமணிய சுவாமி கூட இதனை கண்டித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ், தற்போது நிர்மலா சீதாராமனின் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “இந்த அகந்தையை ஏற்றுக்கொள்ள முடியாது. அது குடிமக்களின் வரிப்பணம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது ஒரு ஜனநாயகம். நீங்கள் ஒன்னும் தொண்டு செய்யவில்லை. கவனமாக நடந்துகொள்ளுங்கள்” என கடுமையாக சாடி உள்ளார். அவரின் டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... தெலங்கானா ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படம் இல்லை; கலெக்டருக்கு உத்தரவிட்ட நிர்மலா சீதாராமன்!!

Follow Us:
Download App:
  • android
  • ios