இந்தியா முழுக்க பல பயனர்களுக்கு ஸ்விகி மற்றும் சொமேட்டோ செயலிகள் முடங்கி இருக்கிறது. இதற்கான காரணம் பற்றி பார்ப்போம்.

ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளான ஸ்விகி மற்றும் சொமேட்டோ இந்தியாவில் இயங்காமல் போனதை அடுத்து அதன் பயனர்கள் உணவு ஆர்டர் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். இரு செயலிகள் முடங்கியதை டவுன்டிடெக்டர் தரவுகளும் உறுதிப்படுத்தி இருக்கின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஸ்விகி மற்றும் சொமேட்டோ செயலிகளில் உணவு ஆர்டர் செய்ய முடியவில்லை என டுவிட்டர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர். பலர் ஸ்விகி மற்றும் சொமேட்டோ கஸ்டமர் கேர் ஐடிக்களை டேக் செய்து தங்களின் புகார்களை பதிவிட்டனர். இதை அடுத்து சுமார் அரை மணி நேரம் இரு சேவைகளும் முடங்கின. 

செயல்பாடு:

திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை முடங்கியதாக ஸ்விகி மற்றும் சொமேட்டோ நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களிடம் டுவிட்டரில் பதில் அளித்தன. இந்தியாவின் ஆன்லைன் உணவு டெலிவரி சந்தையில் முன்னணி நிறுவனங்களாக ஸ்விகி மற்றும் சொமேட்டோ இருக்கின்றன. இரு நிறுவனங்களின் சந்தை மதிப்பு சுமார் 10 பில்லியன் டாலர்கள் ஆகும். 

புகார்:

முன்னதாக ஸ்விகி மற்றும் சொமேட்டோ நிறுவனங்களுக்கு எதிராக பிளாட்பார்ம் நியூட்ராலிட்டி புகார்களை தேசிய ரெஸ்டாரண்ட் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு குற்றம்சாட்டியது. இதை அடுத்து தேசிய காம்படீஷன் கமிஷன் ஆஃப் இந்தியா சார்பில் ஸ்விகி மற்றும் சொமேட்டோ மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஸ்விகி மற்றும் சொமேட்டோ மீது விசாரணை நடத்தப்பட இருக்கிறது.