Asianet News TamilAsianet News Tamil

மிளகாய் பொடி தூவியும் திருந்தாத பிந்து... சபரிமலை செல்ல பாதுகாப்பு கோரிய மனு விசாரணை..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அனைத்து பெண்களையும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கினார். 

supreme court to hear next week plea of woman barred from entering Sabarimala
Author
Kerala, First Published Dec 4, 2019, 4:03 PM IST

சபரிமலை செல்லும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி மிளகாய் பொடி வீசப்பட்ட பிந்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அனைத்து பெண்களையும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கினார். 

supreme court to hear next week plea of woman barred from entering Sabarimala

இதற்கு எதிர்த்து தெரிவித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனையடுத்து, இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், 2018-ம் ஆண்டு அனைத்து பெண்களும் சபரிமலையில் தரிசனம் செய்யலாம் என்ற உத்தரவிற்கு எந்த தடையும் விதிக்கவில்லை. 

supreme court to hear next week plea of woman barred from entering Sabarimala

இதனையடுத்து, சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என கேரள அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்நிலையில், சபரிமலை செல்லும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பிந்து மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில் குறிப்பிட்ட வயதினர் இன்றி எந்த வயதுடைய பெண்கள் சபரிமலைக்கு வந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.

supreme court to hear next week plea of woman barred from entering Sabarimala

முன்னதாக சபரிமலைக்கு செல்வதற்காக அனுமதி கேட்டு பிந்து கொச்சியில் உள்ள காவல் துறை ஆணையரகத்துக்கு வெளியேவந்தபோது, அவர் மீது ஒருவர் பெப்பர் ஸ்பிரே அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios