Asianet News TamilAsianet News Tamil

கவிதா மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு.. விசாரணை நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்..

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்க துறையால கடந்த வாரம் கைது செய்யப்பட்ட பிஆர்எஸ் தலைவர் கே.கவிதாவுவின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

Supreme Court Refuses To Take Up BRS Leader K Kavitha's Petition Against Her Arrest Rya
Author
First Published Mar 22, 2024, 1:13 PM IST

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்க துறையால கடந்த வாரம் கைது செய்யப்பட்ட பிஆர்எஸ் தலைவர் கே.கவிதாவுவின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முதல்வரின் மகளும், பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்.எல்.சி-யுமான கவிதா கடந்த வாரம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஹைதராபாத் இல்லத்தில் இருந்து கைது செய்யப்பட்ட அவர் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். அவரின் அமலாக்கத்துறை காவல் நாளை முடிவடைகிறது.

இந்த நிலையில் அவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. கவிதா தராப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். 

அப்போது நீதிபதிகள் ஜாமீன் பெற விசாரணை நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் அதுதான் வழக்கமான நடைமுறை என்றும், அதை மீற முடியாது என்றும் தெரிவித்தனர். மேலும் கவிதாவின் ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டனர். அரசியல்வாதிகள் அல்லது உச்ச நீதிமன்றத்தை நேரடியாக அணுக முடியும் என்பதற்காக ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை நேரடியாக அணுகுவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்..

அதே நேரம் பணமோசடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர். மேலும் இதுகுறித்து பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

வழக்கின் பின்னணி :

டெல்லி மதுபான கொளை முறைகேடு தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் அமைச்சர் மணிஷ் சிசோடியா ஆகியோருடன் சேர்ந்து கவிதா சதிச்செயலில் ஈடுபட்டுள்ளார் என்று அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. அவர் மதுபான கொள்கைக்காக ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி கொடுத்துள்ளதாகவும் தெர்வித்துள்ளது. எனினும் தன் மீதான குற்றச்சாட்டு தவறானது என்று கவிதா மறுத்துள்ளார்.

முன்னதாக நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் முன்னாள் துணைவேந்தர் மணீஷ் சிசோடியா மற்றும் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்படும் ஆம் ஆத்மி கட்சியின் மூன்றாவது தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios