வக்ஃபு சட்டத் திருத்தம் 2025ல் நிறைவேறியது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் சட்டத்திற்கு முழுத் தடை விதிக்க மறுத்தாலும், ஐந்தாண்டு இஸ்லாம் பின்பற்றுதல், கலெக்டர்களின் அதிகாரம் ஆகிய பிரிவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Waqf Act Amendment Supreme Court Ruling : வக்ஃபு சட்டத் திருத்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா, 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி லோக்சபாவில் மற்றும் ஏப்ரல் 4ஆம் தேதி ராஜ்யசபாவில் நிறைவேறியது. அதே நாளில் குடியரசு தலைவர் ஒப்புதலுடன் "வக்ப் (திருத்த) சட்டம், 2025" என்று பெயர் பெற்றது. இந்த மசோதாவிற்கு எதிராக எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. மேலும் இஸ்லாமிய அமைப்புகளும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தியது. இதனையடுத்து இந்த மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வக்ஃபு சட்டத் திருத்தம்- உச்சநீதிமன்றம் உத்தரவு

வக்ஃபு சட்ட திருத்தத்தை எதிர்த்து செய்யபட்ட ரிட் மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், தலைமையிலான விசாரித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மே 22-ஆம் தள்ளி வைத்ததது. இந்நிலையில், வக்ஃபு சட்டத் திருத்தத்தை எதிர்த்த ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு வழங்கியுள்ளது. சட்டத்தின் சில விதிகளை செயல்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேலும் வக்ப் முழுச் சட்டத்தையும் ரத்து செய்ய போதுமான காரணங்கள் காணவில்லை என தெரிவித்த நீதிபதிகள் இருப்பினும், சில விதிகள் அடிப்படை உரிமைகளுடன் முரண்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். எனவே அந்தப் பிரிவுகளை செயல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக உத்தரவிட்டனர். 

வக்ஃபு சட்டத் திருத்ததுக்கு முழுவதுமாக தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், வக்பு சொத்துக்களை அளிப்போர் ஐந்து ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றி இருக்க வேண்டும் என்ற பிரிவுக்கும் , வக்ஃபு சொத்துகள் குறித்து,ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்திற்கும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது