shiv sena vs shinde:சிவசேனா, ஏக்நாத் ஷிண்டே வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் யாருக்கு என்பது தொடர்பாக சிவசேனா கட்சியும், ஏக்நாத் ஷிண்டே தாக்கல் செய்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் யாருக்கு என்பது தொடர்பாக சிவசேனா கட்சியும், ஏக்நாத் ஷிண்டே தாக்கல் செய்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மகாராஷ்டிராவில் சிவேசனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சார்பில் மகாவிகாஸ் அகாதி ஆட்சி கடந்த 2 ஆண்டுகளாக நடந்தது. இந்நிலையில் சிவசேனாவிலிருந்து 44 எம்எல்ஏக்களைப் பிரித்து ஏக்நாத் ஷிண்டே, பாஜக உதவியுடன் ஆட்சி அமைத்தார். இதனால் மகாவிகாஸ் அகாதி அரசு கவிழ்ந்தது.
பாஜக அதிரடி ! தெலங்கானா பாஜக எம்எல்ஏ டி. ராஜா சிங் சஸ்பெண்ட்
இதையடுத்து, உண்மையான சிவசேனா தாங்கள் எனக் கூறிய ஏக்நாஷ் திண்டே கட்சியின் பெயர், சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. சிவசேனா கட்சியும் தங்களுக்குதான் கட்சியின் சின்னமும், பெயருக்கும் உரிமை இருக்கிறது என முறையிட்டது. இதையடுத்து, இரு பிரிவினரையும் உரிய ஆதாரங்களையும், ஆவணங்களையும் தாக்கல் செய்யக் கோரி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனிடையே, ஏக்நாத் ஷிண்டே தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுகக்கூடாது. அதிருப்தி எம்எல்ஏக்கள் 16பேரை பதவி நீக்கம் செய்யக் கோரும் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது யாருக்கு சின்னம், கட்சி பெயர் என்பதில் தேர்தல் ஆணையம் முடிவு அறிவிக்கக்கூடாது என சிவசேனா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்யப்பட்டது.
இப்படியெல்லாம் பேசக்கூடாது! பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் ‘குட்டு’ : நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
இதற்கிடையே ஏக்நாத் ஷிண்டே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சிவசேனா தரப்பில் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், உண்மையான சிவசேனா யார் என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஆனால் சிவசேனா கட்சியோ தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கக்கூடாது எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் உத்தவ் தாக்கரே தரப்பு, சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபித்தது, சபாநாயகர் தேர்வு, ஷிண்டே பதவி ஏற்பு அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
நபிகள் நாயகம் குறித்து அவதூறு: தெலங்கானா பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங் கைது
இந்நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நீதிபதி, ஹிமா கோலி, கிருஷ்ணா முராரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, “ இன்னும் 2 நாட்கள் வரை, சிவசேனா, ஏக்நாஷ் ஷிண்டே அளித்த மனு மீதுஎந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டாம். இந்த வழக்கில் ஏராளமான சட்டசிக்கல் இருப்பதால், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு வரும் 25ம் தேதி முதல் விசாரிக்கும்” என உத்தரவிட்டார்.