raja singh arrested: bjp: நபிகள் நாயகம் குறித்து அவதூறு: தெலங்கானா பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங் கைது

இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய தெலங்கானா பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங்கை ஹைதராபாத் போலீஸார் கைதுசெய்தனர் என்று செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. 

A BJP MLA raja singh was arrested in Hyderabad after making a remark about the Prophet.

இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய தெலங்கானா பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங்கை ஹைதராபாத் போலீஸார் கைதுசெய்தனர் என்று செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. 

ஹைதராபாத் தெற்கு மண்டலத்தில் உள்ள தபீர்புரா போலீஸ்நிலையத்தில்  டி ராஜா சிங் மீது இன்று காலை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர் மீது ஐபிசி பிரிவு153ஏ, 295, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பில்கிஸ் பானு வழக்கில் 11 பேர் விடுதலைக்கு எதிரான மனு: பரிசீலனைக்கு உச்ச நீதிமன்றம் ஏற்பு

A BJP MLA raja singh was arrested in Hyderabad after making a remark about the Prophet.

கோஷ்மஹால் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த டி ராஜா சிங். இவர் ஏற்கெனவே பலமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்நிலையில் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறகப் பேசி வீடியோ ஒன்றை ராஜா சிங் வெளியிட்டார். 

மானுடவியல்படி கடவுள் உயர் சாதி இல்லை: சிவனே பட்டியலினத்தவர்தான்: டெல்லி ஜேஎன்யு துணை வேந்தர் பேச்சு

இந்த வீடியோவுக்கு எதிராகவும், ராஜாசிங்கை கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று ஹைதராபாத்தின் பல்வேறு இடங்களில் மக்கள் ஆர்பாட்டம் நடத்தினர். குறிப்பாக நகர காவல் ஆணையர் அலுவலகம் முன் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்பாட்டம் செய்தனர். அதன்பின் போலீஸார் போராட்டக்காரர்களிடம் சமாதானம்பேசி கலைந்து செல்லவைத்தனர்.

தபீர்புரா காவல் நிலைய ஆய்வாளர் கூறுகையில் “ போலீஸ் நிலையம் முன் நேற்று இரவு 200க்கும் மேற்பட்டோர் கூடி ராஜா சிங்கை கைது செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, அவர் வெளியிட்ட வீடியோ அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையைத் தொடங்கினோம். இன்று காலை செய்யப்பட்டார்” எனத் தெரிவித்தார்

முஸ்லிம்கள் தொழுகையின் போது ஸ்பீக்கர்கள் பயன்படுத்த தடையில்லை: கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி

A BJP MLA raja singh was arrested in Hyderabad after making a remark about the Prophet.

இதற்கிடையே காமெடி நடிகர் முனாவர் பரூக்கியின் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் கடந்த வாரம் நடக்க இருந்தது. அந்த நிகழ்ச்சியை நடத்தவிடாமாட்டேன் என்று ராஜா சிங் அறிக்கை விடுத்திருந்தார். முனாவர் பரூக்கி இந்துக் கடவுள்களை கிண்டல் செய்து நகைச்சுவை செய்கிறார் என்று ராஜா சிங் கூறியிருந்தார்.

இதையடுத்து, ராஜா சிங் கடந்த 19ம் தேதி முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இதையடுத்து, ஜதராபாத்தில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios