Asianet News TamilAsianet News Tamil

மானுடவியல்படி கடவுள் உயர் சாதி இல்லை: சிவனே பட்டியலினத்தவர்தான்: டெல்லி ஜேஎன்யு துணை வேந்தர் பேச்சு

மானுடவியல் ரீதியாக கடவுள் உயர் சாதி இல்லை. கடவுள் சிவன் கூட பட்டியலினத்தவர் அல்லது பழங்குடியினர்தான் என்று டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் தெரிவித்துள்ளார்.

Gods according to anthropology, do not belong to the upper caste,' says JNU VC.
Author
New Delhi, First Published Aug 23, 2022, 11:37 AM IST

மானுடவியல் ரீதியாக கடவுள் உயர் சாதி இல்லை. கடவுள் சிவன் கூட பட்டியலினத்தவர் அல்லது பழங்குடியினர்தான் என்று டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் நேற்று பாலின நீதியில் டாக்டர் பிஆர் அம்பேத்கர் சிந்தனைகள் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: 

முஸ்லிம்கள் தொழுகையின் போது ஸ்பீக்கர்கள் பயன்படுத்த தடையில்லை: கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி

மனுஸ்மிருதியில் பெண்கள் பற்றி குறிப்பிட்டுள்ளது மிகப்பெரிய பின்னடைவு அதில், பெண்கள் என்பவர்கள் சூத்திரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த பெண்ணும் தன்னை பிராமணர் அல்லது வேறு எந்தச் சாதி என்று குறிப்பிட முடியாது.

அவர் எந்த சாதி ஆண் மகனை திருமணம் செய்கிறாரோ அந்த ஆண் மகனின் சாதியில் பெண் ஐக்கியம் ஆகிவிடுவார். அதாவது கணவர் எந்த சாதியோ அதே சாதி பெண்ணுக்கும் கிடைத்துவிடும். இதுபெண்ணுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய பின்னடைவு என்று நான் கருதுகிறேன்.

இன்று சாதி வன்முறைகள், கொலைகள் அதிகமாக நடக்கின்றன. ஆனால், எந்தக் கடவுளும் உயர் சாதியைச் சேர்ந்தவர் இல்லை. மானுடவியல் ரீதியாக நம்முடைய கடவுளின் தோற்றம்பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும். எந்த கடவுளும் பிராமணர் கிடையாது, சத்திரியர் கிடையாது. 

ஆதார் அட்டை இருந்தா ரூ.4.78 லட்சம் கடன் கிடைக்குமா? இணையத்தில் தீயாய் பரவும் செய்தி உண்மையா?

கடவுள் சிவன் கண்டிப்பாக பட்டியலினத்தவர் அல்லது பழங்குடியினராக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், கல்லறையிலும், கழுத்தில் பாம்புடனும், சிறிய அளவு ஆடைககளுடனும் உள்ளார். பிராமணர்கள் கல்லறையிலும் கழுத்தில் பாம்புடனும் இருப்பார்கள் என நான் நினைக்கவில்லை.

மானுடவியல்ரீதியாக கடவுள்களான லட்சுமி, சக்தி தேவி, ஜெகந்நாதர்கூட உயர் சாதியிலிருந்து வந்தார்கள் என்றுநான்நினைக்கவில்லை. ஜெகந்நாதர்கூட பழங்குடியினர்தான். மிக மிக மனிதநேயற்ற பாகுாபாட்டை நாம் ஏன் தொடர்ந்து வருகிறோம். பாபசேகேப் அம்பேத்கரின் சிந்தனைகளைக் கடைபிடித்து, இந்த வேறுபாட்டை நாம் மறுபரிசீலனை செய்வது முக்கியமானது.

தமிழகப் பொருளாதாரத்தை சீரழிக்கும் பிடிஆர் தியாகராஜனின் ஈகோ, ஜாலப் பேச்சு: பாஜக தலைவர் அண்ணாமலை விளாசல்

இந்துத்துவம் என்பது  மதம் அல்ல. அது வாழ்வியல்முறை. வாழ்வியல்முறையாக இருந்தால் நாம் ஏன் விமர்சனத்துக்கு அஞ்சுகிறோம். நம்முடைய சமூகத்தில் நிரம்பியிருந்த வேறுபாட்டையும், சாதிப்பாகுபாட்டையும் களையெடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் கவுதம புத்தர்தான்

இவ்வாறு சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் தெரிவித்தார்
 

Follow Us:
Download App:
  • android
  • ios