முஸ்லிம்கள் தொழுகையின் போது ஸ்பீக்கர்கள் பயன்படுத்த தடையில்லை: கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி

முஸ்லிம்கள் தங்களின் தொழுகையின்போது தொழுகைக்கு மற்றவர்களை அழைக்கும்  ஆசான்களை கூற பெரியஸ்பீக்கர்களைப் பயன்படுத்துவது மற்ற மதத்தினரின் அடிப்படை உரிமையை மீறுவதாகாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Azan over the loudspeakers does not violate the fundamental rights of people of other religions: HC K'taka

முஸ்லிம்கள் தங்களின் தொழுகையின்போது தொழுகைக்கு மற்றவர்களை அழைக்கும்  ஆசான்களை கூற அதிக சத்தம் வரும் ஸ்பீக்கர்களைப் பயன்படுத்துவது மற்ற மதத்தினரின் அடிப்படை உரிமையை மீறுவதாகாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதையடுத்து மசூதிகளில் கட்டப்பட்டுள்ள ஸ்பீக்கர்களை நீக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும், ஸ்பீக்கர்களை நீக்கவும் நீதிமன்றம் உத்தரவிட மறுத்துவிட்டது.

அதேநேரம், அப்பகுதியில் ஒலி மாசு ஏற்படாமல் இருக்க தேவையான விதிகளை அதிகாரிகள் அமல்படுத்தலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

அசைவம் சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு செல்வதில் தவறில்லை… ஸ்ரீ ராம் சேனா நிறுவனர் சர்ச்சை கருத்து!!

Azan over the loudspeakers does not violate the fundamental rights of people of other religions: HC K'taka

மசூதிகளில் ஆசான்கள் கூறுவதற்கு அதிக சத்தம் வரும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துகிறார்கள். இது மதத்தின்மீது நம்பிக்கை இருப்போருக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. இதை நீக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, பெங்களூரைச் சேர்ந்த மஞ்சுநாத் எஸ் ஹலாவார் என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

1 நாட்கள் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் அராதே தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தலைமை நீதிபதி அலோக் அரோதே பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

அரசியலமைப்புச் சட்டம் 25 மற்றும் 26 பிரிவு இந்திய நாகரீகத்தின் சகிப்புத்தன்மையை உள்ளடக்கியது. பிரிவு 25(1)ன் கீழ் ஒருவர் தான் சார்ந்திருக்கும் மதத்தை பின்பற்றவும், பரப்பவும் சுதந்திரமான உரிமை இருக்கிறது.

Azan over the loudspeakers does not violate the fundamental rights of people of other religions: HC K'taka

ஆனால், இது முழுமையான சுதந்திரமான உரிமை அல்ல. பொதுஒழுங்கு, ஒழுக்கம், சுகாதாரம் ஆகியவற்றுக்கு அரசியலமைப்புச்சட்டம் 3-வது பிரிவின்படி கட்டுப்பட்டதாகும். 

மசூதிகளில் ஆசான் ஒலிப்பதால் பிற மதத்தினர், பிற நம்பிக்கையாளர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்ற மனுதாரரின் வாதத்தை ஏற்க முடியாது. அதேநேரம், மசூதிகளில் பயன்படுத்தப்பும் ஒலி பெருக்கிகளால் ஒலி மாசு ஏதேனும் இருக்கிறதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்யலாம். அவ்வாறு இருந்தால் கட்டுப்பாடுள் விதிக்கலாம். ஆனால், தடைவிதிக்க முடியாது.

ஆதார் அட்டை இருந்தா ரூ.4.78 லட்சம் கடன் கிடைக்குமா? இணையத்தில் தீயாய் பரவும் செய்தி உண்மையா?

Azan over the loudspeakers does not violate the fundamental rights of people of other religions: HC K'taka

ஒலிபெருக்கிகள், அதிகமான ஒலியை ஏற்படுத்தும் கருவிகள், இசைக் கருவிகள் ஆகியவற்றின் மூலம் வரும் ஒலி, பொது மக்களுக்கான அறிவிப்புகள்  ஆகியவை அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவுக்குத்தான் இரவு 10மணி முதல் காலை 6 மணிவரை இருக்க வேண்டும் என்பதை அதிகாரிகள் உறுதி செய்யலாம். இது தொடர்பாக அடுத்த 8 வாரங்களுக்குள் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆய்வு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்”
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios