ஆதார் அட்டை இருந்தா ரூ.4.78 லட்சம் கடன் கிடைக்குமா? இணையத்தில் தீயாய் பரவும் செய்தி உண்மையா?
ஆதார் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் மத்திய அரசு ரூ.4.78 லட்சம் கடன் கொடுப்பதாக செய்திகள் இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் இதுக்குறித்து பிஐபி ஃபேக்ட் செக் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
ஆதார் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் மத்திய அரசு ரூ.4.78 லட்சம் கடன் கொடுப்பதாக செய்திகள் இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் இதுக்குறித்து பிஐபி ஃபேக்ட் செக் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. அன்மை காலமாக ஆன்லன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இந்த மோசடி வலையில் பலரும் சிக்கியுள்ளனர். இதுகுறித்து வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படுகிறது, உங்களுக்கு வங்கிக் கடன் வழங்க ஒப்புதல் கிடைத்துள்ளது, இந்த இணையதளத்தில் சலுகை விலையில் பொருட்கள் விற்கப்படுகிறது என்று போலியான விளம்பரங்களும் தகவல்களும் ஆன்லைனில் நிரம்பி காணப்படுகிறது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் கூட அறிவிச்சாச்சு.. இங்கு இரண்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்தும் அறிவிக்கல.. அன்புமணி ஆதங்கம்..
மேலும் இதுபோன்ற தகவல்கள் தினந்தோறும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட உதவி அல்லது சலுகையை பெறுவதற்கு அவர்கள் இணைத்துள்ள லிங்க் உள்ளே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படும். அதனுள்ளே சென்றால், நமது பெயர், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களைப் பெற்று மோசடி செய்கின்றனர். ஆகவே, இதுபோன்ற மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அவ்வபோது அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நீங்க செலவுசெஞ்சதுக்கு நாங்க பணம் கொடுக்கணுமா'! ஆளுநரிடம் பவரைக் காட்டிய பஞ்சாப் அரசு
இந்த நிலையில் தற்போது ஆதார் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் மத்திய அரசு ரூ.4.78 லட்சம் கடன் கொடுப்பதாக செய்திகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுக்குறித்து பிஐபி ஃபேக்ட் செக் அமைப்பு தெரிவிக்கையில், அனைத்து ஆதார் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு ரூ.4.78 லட்சம் கடன் கொடுக்க இருப்பதாக செய்தி ஒன்று உலா வருகிறது. இது போலியானது. அந்தச் செய்தியை யாருக்கும் ஃபார்வார்டு செய்யக் கூடாது. உங்களது நிதி விவகார தகவல்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.