aap in punjab:'நீங்க செலவுசெஞ்சதுக்கு நாங்க பணம் கொடுக்கணுமா'! ஆளுநரிடம் பவரைக் காட்டிய பஞ்சாப் அரசு
ஆளுநர் அலுவலகம் ஒருவாரம் மதரீதியான கொண்டாடங்களளில் ஈடுபட்டு ரூ.8 லட்சம் பில் அனுப்பினால் அதே செலுத்த முடியாது என பஞ்சாப் அரசு திருப்பி அனுப்பிவிட்டது.
ஆளுநர் அலுவலகம் ஒருவாரம் மதரீதியான கொண்டாடங்களளில் ஈடுபட்டு ரூ.8 லட்சம் பில் அனுப்பினால் அதே செலுத்த முடியாது என பஞ்சாப் அரசு திருப்பி அனுப்பிவிட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு நடக்கிறது. அங்கு ஆளுநராக தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இருக்கிறார். தமிழகத்தில் புரோஹித் இருக்கும்போது, எந்தமாதிரியான குடைச்சல்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு கொடுத்தாரோ அதேபோன்று பஞ்சாப் அரசுக்கு கொடுத்து வருகிறார்.
ஆனால், தமிழகத்தில் இருந்த அஇஅதிமுக ஆட்சி போல் இல்லை ஆம் ஆத்மி கட்சி. அவ்வப்போது தங்களுக்கு கிடைக்கும் பந்தில் சிக்ஸர் அடிக்கத் தவறுவதில்லை. ஆளுநர் மாளிகையிலிருந்து ஏதாவது ஒரு கோரிக்கை வரும்போது, மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கும் அரசு ‘எப்படி’ கையாள வேண்டுமோ ‘அப்படி’ கையாண்டு பதிலடி கொடுத்து விடுகிறது.
உ.பி இனி அமெரிக்காவாக மாறப்போகிறது.. முதல்வர் யோகியின் மாஸ்டர் பிளான் - நம்ம லிஸ்ட்லயே இல்லையே !
சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் மதரீதியான நிகழ்ச்சிகள் கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் 29ம் தேதிவரை ஒரு வாரம் நடந்தது. இந்த ஒருவார நிகழ்ச்சிக்கு ஆளுநர் மாளிகை தாராளமாக செலவிட்டது. கூடாரம் அமைத்தல், இருக்கைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு செலவுகளைச் செய்து அதற்கு ரூ.8.31 லட்சம் பில் போட்டு பஞ்சாப் அரசுக்கு அனுப்பியது.
கடந்த மே 11ம் தேதி பில் தேதியிட்டு இந்த பில் கட்டணத்தை குறிப்பிட்ட நிறுவனத்துக்கு செலுத்திவிடுங்கள் எனக் கூறி கடந்த ஜூன் 16ம் தேதி ஆளுநர் மாளிகை சார்பில் மாநில அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், பஞ்சாப் அரசு ரூ.8.31 லட்சத்துக்கான பில் தொகையை பாஸ் செய்ய மறுத்துவிட்டது.
இது குறித்து பஞ்சாப் அரசு வட்டாரங்கள் கூறுகையில் “ ஆளுநர் மாளிகை அனுப்பிய பில் கட்டணத்தை எந்தப் பிரிவில் கணக்குக் காட்டுவது , எந்தச் செலவில் சேர்ப்பது எனத் தெரியவில்லை. இதனால் நிதிஅமைச்சகத்தால் ஆளுநர் மாளிகை அனுப்பிய பில்லுக்கு உடனடியாக பணம் செலுத்த முடியவில்லை.
குஜராத்தில் போதை மருந்து தொழில் எளிதாகச் செய்யலாம்: பிரதமர் மவுனம் ஏன்? ராகுல் கேள்வி
ஆனால், பஞ்சாப்பில் முதல்முறையாக, மாநில ஆளுநர் அனுப்பிய பில் கட்டணத்தை செலுத்த முடியாது என்று மாநில அரசு திருப்பி அனுப்பியது இதுதான் முதல்முறை” எனத் தெரிவித்தனர்.