புதுச்சேரியில் கூட அறிவிச்சாச்சு.. இங்கு இரண்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்தும் அறிவிக்கல.. அன்புமணி ஆதங்கம்..

திமுக அரசு பதவியேற்று இரு நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகைக்கான வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று புதுச்சேரி பட்ஜெட்டை முன்வைத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
 

Rs.1000 incentive scheme - PMK Leader Anbumani Ramadoss Statement

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "புதுச்சேரியில் 21 வயது முதல் 57 வயது வரையிலான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

21 வயதுக்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் உதவித்தொகை என அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் 21 வயதுக்கு முன்பு திருமணம் செய்வது குறையும். அந்த வகையில் இது மகளிர் மற்றும் சமுதாய மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும்.

மேலும் படிக்க:இலவசங்கள் தரும் கட்சியோடு பாஜக கூட்டணி இல்லையா..? அண்ணாமலையின் அதிரடி பதில்

தமிழகத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. புதிய அரசு பதவியேற்று இரு நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது மகளிர் உரிமைக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். எனவே, இந்த விவகாரத்தில் இனியும் தாமதம் செய்யாமல் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் படிக்க:புழலுக்கு எடப்பாடியும், புனித ஜார்ஜ் கோட்டையில் OPSம் செல்லும் காலம் வரும்! மாஸ் காட்டும் மருது அழகுராஜ்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios