baba ramdev: இப்படியெல்லாம் பேசக்கூடாது! பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் ‘குட்டு’ : நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
அலோபதி மருத்துவம் குறித்தும், மருத்துவர்கள் குறித்தும் இழிவாகக் கருத்துக்களைத் தெரிவிப்பதில் பாபா ராம்தேவ் தன்னைக் கட்டுப்படுத்திக்ககொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குட்டுவைத்துள்ளது.
அலோபதி மருத்துவம் குறித்தும், மருத்துவர்கள் குறித்தும் இழிவாகக் கருத்துக்களைத் தெரிவிப்பதில் பாபா ராம்தேவ் தன்னைக் கட்டுப்படுத்திக்ககொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குட்டுவைத்துள்ளது.
கடந்த ஆண்டு பாபா ராம்தேவ் ஆதரவோடு நடத்தப்படும் பதஞ்சலி நிறுவனம் சார்பில் கரோனில் எனும் மாத்திரை கொரோனா வைரஸ் தடுப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
நபிகள் நாயகம் குறித்து அவதூறு: தெலங்கானா பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங் கைது
இந்த மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வைரஸ் குணமடைந்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டது.உலக சுகாதார அமைப்பு, ஆயுஷ் அமைச்சகம் அங்கீரித்துவிட்டதாக விளம்பரம் செய்யப்பட்டது.
ஆனால், அந்த மருந்து குறித்து இந்திய மருத்துக் கூட்டமைப்பு ஆய்வு செய்ய முயன்றபோது, உலக சுகாதார அமைப்பு அனுமதிவழங்கவில்லை, ஆயுஷ் அமைச்சகம் மட்டுமே முதல்கட்ட அனுமதி வழங்கியதாக பதஞ்சலி நிறுவனம் சார்பில் தெரிவிக்ககப்பட்டது.
இதன்பின் யோகா குரு பாபா ராம்தேவ் தொடர்ந்து அலோபதி மருத்துவத்தையும், மருத்துவர்களையும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதையும், தடுப்பூசியையும் அவதூறாகவும், நம்பிக்கைக் குறைவாகவும் பேசத் தொடங்கினார். இது தொடர்பாக பல முறை ராம்தேவுக்கும், இந்திய மருத்துவக் கூட்டமைப்பும் இடையே அறிக்கை போர் நடந்தது. பல முறை பாபா ராம்தேவுக்கு கண்டனம் தெரிவித்தும் அவர் அடங்கவில்லை.
பில்கிஸ் பானு வழக்கில் 11 பேர் விடுதலைக்கு எதிரான மனு: பரிசீலனைக்கு உச்ச நீதிமன்றம் ஏற்பு
பாபா ராம் தேவ் தொடர்ந்து அலோபதி மருத்துவம், மருத்துவர்கள், நவீன மருத்துவ முறை குறித்து மக்களிடம் இழிவாகவும், நம்பிக்கைக் குறைவாகவும், மோசமாகவும் பேசி வந்தார்.
இதையடுத்து, இந்திய மருத்துவக் கூட்டமைப்பு(ஐஎம்ஏ) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் “ கொரோனா தடுப்பூசி குறித்தும், நவீன மருத்துவம் குறித்து தவறானப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. எலும்புகள் பலவீனமாகும், நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்துவிடும்.
அலோபதி மருத்துவர்கள் தடுப்பூசி செலுத்தியும் அவர்களுக்கும் கொரோனா வருகிறது என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது, விளம்பரங்கள் வருகின்றன. இது தடுக்கப்பட வேண்டும். அந்த விளம்பரங்களைச் செய்யும் பாபா ராம்தேவ் பேசுவதற்கு தடைவிதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ரவிக்குமார், ஹிமா கோலி தலைமையிலான அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது, அலோபதி மருத்துவம், மருத்துவர்கள்,மருத்துவ முறை குறித்து அவதூறு செய்தல், இழிவாகப் பேசுதல் குறித்து ஐஎம்ஏ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா “ ஏன் பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவத்தையும், மருத்துவர்களையும், மருத்துவ முறையையும் இழிவாகப் பேசுகிறார். இனிமேல் பாபா ராம்தேவ் இவ்வாறு இழிவாகவும், அவதூறாகவும் பேசக்கூடாது. மற்ற மருத்துவ முறைகளைப் பற்றி தவறாகவும்,இழிவாகவும் பேசுவதிலிருந்து பாபா ராம்தேவ் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ரவிக்குமார், “ அலோபதி மருத்துவத்தை பாபா ராம் தேவ் கிண்டல் செய்கிறாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.
11 நாட்கள் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
தலைமை நீதிபதி ரமணா பேசுகையில் “ ராம்தேவுக்கு என்ன ஆயிற்று. அவரை நாங்கள் மதிக்கிறோம். அவர் யோகா கலையை பரப்புகிறார். நல்ல விஷயம்தான் பரப்பட்டும். ஆனால், அதற்காக அவர் ஏன் மற்ற மருத்துவ முறைகளை ஏன் விமர்சிக்க வேண்டும். மற்ற மருத்துவ முறைகளை ராம்தேவ் விமர்சிக்க கூடாது. அவ்வாறு விமர்சிப்பதிலிருந்து அவர் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
பாபா ராம்தேவ் கூறும் மருத்துவ முறை 100 சதவீதம் சிறப்பாகச் செயல்படும் என்பதற்கு உத்தரவாதம் இருக்கிறதா. பின்னர் ஏன் அலோபதி மருத்துவத்தை அவர் விமர்சிக்கிறார்.
இந்த விவகாரத்தில் இந்திய விளம்பர தரக் கவுன்சில், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், பதஞ்சலி ஆயுர்வேதா, மத்திய அரசு மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப விளக்க அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்