நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள மசூதியை அகற்றுங்கள்: உச்சநீதிமன்றம் உத்தரவு

70 ஆண்டுகளுக்கும் மேலாக அலகாபாத் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்துவரும் மசூதியை 3 மாதத்தில் அகற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Supreme Court Orders Removal Of Mosque Inside Allahabad High Court Complex

அலகாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மசூதியை மூன்று மாதங்களுக்குள் அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அந்தக் கட்டிடம் நீதிமன்றத்தின் குத்தகை நிலப்பகுதியில் உள்ளதாகவும், அதற்கு மனுதாரர்கள் உரிமை கோர முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்ற வக்பு வாரியமும் மற்றும் உத்தரப் பிரதேச சன்னி முஸ்லீம்களின் வக்பு வாரியமும் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கியது.

அதில், மசூதியை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு, அதற்கு மூன்று மாத அவகாசமும் அளித்துள்ளது. அதே சமயத்தில், நீதிமன்றத்துக்கு அருகிலேயே மசூதி அமைக்க நிலம் ஒதுக்குமாறு மனுதாரர்கள் உத்தர பிரதேச அரசிடம் கோரலாம் என்றும் அனுமதி அளித்துள்ளது.

KS Eshwarappa: ஸ்பீக்கர் இல்லாமல் அல்லாவுக்குக் காது கேட்காதா? பாஜக முன்னாள் அமைச்சரின் சர்ச்சை பேச்சு

Supreme Court Orders Removal Of Mosque Inside Allahabad High Court Complex

தற்போது மசூதி அமைந்துள்ள நிலம் குத்தகைச் சொத்து என்றும், அதற்கு உரிமை கோர முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், "இன்று முதல் மூன்று மாதங்களுக்குள் மசூதி கட்டிடத்தை அகற்றவில்லை என்றால், அதனை உயர்நீதிமன்றமோ உ.பி. அரசு அதிகாரிகளோ அந்தக் கட்டிடத்தை இடிக்கவோ அகற்றவோ நடவடிக்கை எடுக்கலாம்" என்றும் கூறியுள்ளது.

மசூதியின் நிர்வாகக் குழு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், 1950களில் இருந்து மசூதி உள்ளது என்றும், அதை வெளியே கொண்டுசெல்லச் சொல்ல முடியாது என்று கூறினார். "2017ல் ஆட்சி மாறியது, எல்லாமே மாறியது. புதிய அரசு அமைந்து 10 நாட்களுக்குப் பிறகு பொதுநல மனு தாக்கல் செய்யப்படுகிறது. அவர்கள் நிலம் கொடுத்தால் மாற்று இடத்திற்குச் செல்ல எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை" என்று அவர் கூறினார்.

முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது, உத்தரப் பிரதேச அரசு மசூதியை வேறு இடத்திற்கு மாற்ற நிலம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மசூதியை நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளாகவே வேறு இடத்திற்கு மாற்ற இடம் இல்லை என்றும், மாற்று இடம் வழங்குவது பற்றி உ.பி. அரசு பரிசீலிக்கலாம் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றத்தில் கூறியிருந்தது. ஏற்கனவே நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை இருப்பதாகவும் உயர்நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.

5 வருசம் ஆச்சு! சம்மதத்துடன் உடலுறவு கொண்டது பலாத்காரம் ஆகாது: உயர்நீதிமன்றம் கருத்து

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios