நீட் மருத்துவ முதுநிலை தேர்வை வரும் 21 ஆம் தேதி நடத்துவதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதோடு முதுநிலை நீட் தேர்வை தள்ளிவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நீட் மருத்துவ முதுநிலை தேர்வை வரும் 21 ஆம் தேதி நடத்துவதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதோடு முதுநிலை நீட் தேர்வை தள்ளிவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி. எம்.எஸ். படிப்புகளில் சேருவதற்காக முதுநிலை நீட் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வை ஒத்திவைக்கும்படி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளநிலை மருத்துவ மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர். கலந்தாய்வு நடந்துகொண்டிருப்பதால் முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கும்படி இளநிலை மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில் 2021 ஆம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான அனைத்து கலந்தாய்வும், 2022 ஆம் ஆண்டு முதுநிலை நீட் தேர்வும் ஒரே நேரத்தில் நடப்பதால் குழப்பம் ஏற்படும். நடுத்தர மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாதிக்கும். எனவே மே 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைத்து வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் முதுநிலை மருத்துவ படிப்புக்கான 2022 நீட் தேர்வை தள்ளி வைக்ககோரிய உச்சநீதின்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பெரும்பாலானவர்கள் நீட் 2022 தேர்வு வேறு தேதிக்கு ஒத்தி வைக்க விரும்புகின்றனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான முதுநிலை நீட் கலந்தாய்வு தற்போது நடைபெறுவதால் இது குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள முதுதிலை நீட் 2022 தேர்வு ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும், நாங்கள் தலையிட விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இதன்பின் நீட் முதுநிலை தேர்வை வரும் 21 ஆம் தேதி நடத்துவதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதால் தேர்வை ஒத்திவைத்தால் குழப்பம், பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.