சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து வந்த தீபக் மிஸ்ரா நேற்று நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து இன்று புதிய தலைமை தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றார். 

புதிய தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். 14 மாதங்கள் பதவியில் நீடிக்கும் அவர், அடுத்த ஆண்டு நவம்பரில் ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் ரஞ்சன் கோகாய் ஆகியோரின் சொத்து மதிப்பை அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் வெளியிட்டார் 

புதிய நீதிபதி ரஞ்சன் கோகாய் மனைவிக்கு திருமணத்தின் போது அவரின் பெற்றோர் சீதனமாக அளித்த நகைகள் மற்றும் LIC மூலம் 30 லட்சத்திற்கும் குறைவான காப்பீடு தொகை மேட்டுமே உள்ளதாம்.இதே போன்று தீபக் மிஸ்ராவிடம், 2 மோதிரம் மற்றும் ஒரு தங்க செயின் வைத்து உள்ளனர். கோகாயின் மனைவியை விட மிஸ்ராவின் மனைவியிடம் சற்று கூடுதலாக நகைகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டு  உள்ளது 

ரஞ்சன் கோகாய் மற்றும் தீபக் மிஸ்ராவிடம் சொந்த வாகனங்கள் கூட ஏதும் இல்லை. கடந்த 20  ஆண்டுகளில் ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக இருப்பதால், அவர்கள் தொடர்ந்து அரசு  வாகனத்தையே பயன்படுத்தி வந்தனர் 

தீபக் மிஸ்ரா, ரூ. 22.5 லட்சம் மதிப்பில் டில்லியில் வீடு ஒன்றை வாங்கி உள்ளார். மேலும்மொரு வீடு ஒரிசா  மாநிலத்திலும் உள்ளது. அதேபோன்று  தற்போது நீதிபதியாக பதவி ஏற்று உள்ள கோகாய்க்கு சொந்த வீடு கூட கிடையாது. வங்கியில் கடனும் இல்லை. சொத்துக்கள் அடமானம் இல்லை.

இருந்தபோதிலும், சுப்ரீம் கோர்டில் உள்ள மூத்த வழக்கறிஞர்கள் ஒரு நாளைக்கு பல லட்சங்களில்   சம்பாதிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.