Asianet News TamilAsianet News Tamil

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி!

Supreme Court dismissed the cancel the Neet petition
Supreme Court dismissed the cancel the Neet petition
Author
First Published Jun 1, 2018, 3:10 PM IST


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, சங்கல்ப் தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மருத்துவத்துறைக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் முதல் வாரத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்த தேர்வினை ரத்து செய்யக்கோரி சங்கல்ப் என்ற
தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

சங்கல்ப் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், கடந்த மே மாதம் முதல் வாரம் நடைபெற்ற நீட் தேர்வில் பீகார், ஒடிசா, தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் மொழிளில் கேட்கப்பட்ட கேள்விகளில் குளறுபடி இருந்ததாக கூறப்பட்டிருந்தது.

எனவே, நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும், மீண்டும் புதிதாக ஒரு தேர்வினை நடத்தி வெளியிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில்  எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி நாகேஷ்வர ராவ், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். வேண்டுமென்றால் மனுதாரர் இந்த வழக்கு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகி கொள்ளலாம் என்றும் நீதிபதி கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios