லலித் மோடியின் நிபந்தனையற்ற முழு மன்னிப்புகோரியது ஏற்கப்பட்டதால் அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி, சமூக வலைதளங்களில் நீதித்துறைக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதையடுத்து, அவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

திங்கள்கிழமை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, லலித் மோடி தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், "அவர் (லலித் மோடி) எதிர்காலத்தில் நீதிமன்றங்கள் அல்லது இந்திய நீதித்துறையின் மகத்துவம் அல்லது கண்ணியத்திற்கு முரணான எதையும் செய்யமாட்டார்" என்று கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுகொள்ளப்பட்டிருக்கிறது.

"நிபந்தனையற்ற மன்னிப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எதிர்காலத்தில் இந்திய நீதித்துறை மற்றும் நீதிமன்றங்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவது அல்லது சமமான இதுபோன்ற எந்தவொரு முயற்சியில் ஈடுபட்டாலும் நீதிமன்றம் அதனை கடுமையான எடுத்துக்கொள்ளும்" என எச்சரித்தது.

கேரளா ஸ்டைலில் கொச்சியைக் கலக்கிய பிரதமர் மோடி! ஆயிரக்கணக்கானோர் கூடி மலர் தூவி வரவேற்பு!

"நிபந்தனையற்ற மன்னிப்பை நாங்கள் பரந்த மனதுடன் ஏற்றுக்கொள்கிறோம், ஏனெனில் நீதிமன்றம் எப்போதும் மன்னிப்பை நம்புகிறது. ஒட்டுமொத்தமாக நிறுவனத்தை அனைவரும் மதிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் ஒரே கவலை" எனவும் நீதிமன்றம் கூறியது.

ஏப்ரல் 13 அன்று, நீதித்துறைக்கு எதிரான லலித் மோடியின் கருத்துக்களுக்கு உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது. சமூக ஊடக தளங்கள் மற்றும் தேசிய செய்தித்தாள்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும்படி அவருக்கு உத்தரவிட்டது.

அவர் சட்டத்திற்கும் மேலானவர் அல்ல என்று அறிவுறுத்திய நீதிமன்றம், மன்னிப்பு கேட்கும் முன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டது. இந்திய நீதித்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், எதிர்காலத்தில் இதுபோன்ற பதிவுகள் எதுவும் செய்யப்பட மாட்டாது என்று அதில் உறுதி அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

லண்டன் செல்கிறது என்ஐஏ குழு! இந்தியத் தூதரகத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் குறித்து விசாரணை