Asianet News TamilAsianet News Tamil

கேரளா ஸ்டைலில் கொச்சியைக் கலக்கிய பிரதமர் மோடி! ஆயிரக்கணக்கானோர் கூடி மலர் தூவி வரவேற்பு!

இரண்டு நாள் பயணமாக இன்று கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி கொச்சியில் ஊர்வலமாகச் சென்றார். ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு மலர் தூவி வரவேற்றனர்.

PM Modi begins mega road show in Kerala's Kochi; 1000s line up to greet him
Author
First Published Apr 24, 2023, 7:57 PM IST | Last Updated Apr 24, 2023, 8:03 PM IST

கொச்சி: இரண்டு நாள் பயணமாக கேரளாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை கொச்சி வந்தார். கடற்படை விமானப்படை தளத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடி, கேரளாவில் முதல் முறையாக தேவாரத்தில் உள்ள சேக்ரட் ஹார்ட் கல்லூரி வரை தனது மெகா ரோடு ஷோவை தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடி தனது வாகனத்தில் இருந்து இறங்கி, மக்களின் இருப்பு மற்றும் ஆதரவுக்காக மக்களை நோக்கி கை அசைத்து நடக்க தொடங்கினார். அவர் கேரளா பாணியில் பாரம்பரிய முறையில் வெள்ளை சட்டை மற்றும் வேட்டை அணிந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.

கேரளாவில் பிரதமர் மோடி மெகா ரோட் ஷோ நடத்துவது இதுவே முதல்முறை, மக்கள் பிரதமர் மீது மலர் மழை பொழிவதைக் காணலாம். அவரது வருகைக்காக பாரதிய ஜனதா கட்சியினர் சில மணி நேரம் காத்திருந்தனர்.

கேரளாவில் முதல் நிகழ்வாக யுவம் 2023 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். கேரளா இளைஞர்களுடன் நேரடியாக தொடர்புகொள்ளும் நோக்கில் இந்த மிகப்பெரிய இளைஞர் உச்சி மாநாடு நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை வைப்ரன்ட் யூத் ஃபார் மோடிஃபையிங் கேரளா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

லண்டன் செல்கிறது என்ஐஏ குழு! இந்தியத் தூதரகத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் குறித்து விசாரணை

PM Modi begins mega road show in Kerala's Kochi; 1000s line up to greet him

பிரதமர் வருகையை முன்னிட்டு நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  பாஜக தலைவர்கள் பிரகாஷ் ஜவடேகர், பெங்களூரு எம்பி தேஜஸ்வி சூர்யா, அனில் ஆண்டனி, முன்னாள் எம்பி சுரேஷ் கோபி மற்றும் மலையாள திரையுலகின் முக்கிய பிரமுகர்களான உன்னி முகுந்தன், விஜய் யேசுதாஸ், கே.எஸ்.ஹரிசங்கர், நவ்யா நாயர், அபர்ணா பாலமுரளி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Karnataka Elections 2023: லோக் ஆயுக்தா ரெய்டு... வீட்டு வாசலில் அழுது புரண்டு நாடகமாடிய அதிகாரி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios