இமாச்சல பிரதேசத்தின் முதல்வர், துணை முதல்வர் யார் யார் ? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரையில் பாஜக, காங்கிரஸ் என மாறி, மாறி ஆட்சி அமைத்து வருகிறது. கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாகவே வெளிவந்தன. கருத்துக்கணிப்பை பொய்யாக்கி காங்கிரஸ் கட்சி இமாச்சலில் மாபெரும் வெற்றியை பெற்றது.
காங்கிரஸ் கட்சியின் நிலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை தொடர்ச்சியாக பாஜகவிடம் ஆட்சியை இழந்து கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இது முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க..மாண்டஸ் புயலில் இருந்து மக்களை காப்பாற்றிய சென்னை மாநகராட்சிக்கு நன்றி.. ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள் !!
தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஹிமாச்சல் காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங், எதிர்க்கட்சி தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி, முன்னாள் மாநிலத் தலைவர் சுக்விந்தர் சிங் சுகு உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி அகில இந்திய தலைவர் மாற்றம், இந்திய ஒற்றுமை பயணம், பிரியங்கா காந்தி பிரச்சாரம் என பல்வேறு விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டது.
இமாச்சலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பிரியங்கா காந்தியின் இறுதிக்கட்ட பிரச்சாரம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பாஜகவில் உள்ள உட்கட்சி பூசல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு அடித்தளமாக பார்க்கப்படுகிறது. இமாச்சல பிரதேசத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது.
இதையும் படிங்க.. புயலில் இருந்து சென்னை மீண்டாச்சு.. மக்கள் திருப்தியாக இருக்கின்றனர் - முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!
இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வர் யார் என்ற அறிவிப்பை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இமாச்சல பிரதேசத்தின் துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க.. மக்கள் அச்சத்திலிருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்கிறார்கள்.. தமிழக அரசை பாராட்டிய ராமதாஸ்!