இந்தியப் பெருங்கடலில் கெத்து காட்டிய விமானப்படை! சுகோய் போர் விமானம் 8 மணிநேரம் தொடர் ரோந்து சென்று சாதனை!
ரபேல் விமானங்களைத் தொடர்ந்து சுகோய் ரக போர் விமானமும் (Sukhoi-30MKI) இந்தியப் பெருங்கடல் பகுதியில் தொடர்ந்து 8 மணிநேரம் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கிறது
இந்திய விமானப் படையின் சுகோய் ரக போர் விமானம் சுகோய் எஸ்.யு.30 எம்கேஐ (Sukhoi-30MKI) இந்தியப் பெருங்கடல் பகுதியில் தொடர்ந்து 8 மணிநேரம் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கிறது. இது இந்திய விமானப்படையின் புதிய சாதனையாக அமைந்துள்ளது. இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் ரபேல் போர் விமானம் இந்திய பெருங்கடல் பகுதியில் கிழக்கு கடற்பரப்பில் வடக்கு அந்தமான் பகுதியில் தொடர்ந்து 6 மணிநேரம் ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்தது.
சுகோய் மற்றும் வேறு சில விமானப்படை போர் விமானங்கள் குஜராத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டன. IL-78 டேங்கர்கள் மூலம் நடுவானில் எரிபொருள் நிரப்பிய பிறகு ஓமன் வளைகுடாவிற்கு அருகே நிர்ணயிக்கப்பட்ட பகுதியில் ரோந்து சென்றன என இந்தி விமானப்படை அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி தலைவரே... பிரதமரிடம் கேள்வி கேட்ட கார்கேவுக்கு பாஜக கொடுத்த பதிலடி!
இந்திய பெருங்கடலை பசிபிக் பெருங்கடலுடன் இணைக்கும் மலாக்கா நீரிணை மலேசிய தீபகற்பத்துக்கும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கும் இடையில் அமைந்துள்ளது. சர்வதேச கடல்சார் வர்த்தகத்தில் 25 சதவீதம் மலாக்கா நீரிணை வழியாக நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரம் கப்பல்களுக்கு மேல் இந்த மலாக்கா நீரிணை வழியாகச் சென்று வருகின்றன. அதிலும் முக்கியமாக சீனா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் கிட்டத்தட்ட 80 சதவீதம் மலாக்கா நீரிணை மூலமாகத்தான் அந்நாட்டுக்குச் செல்கிறது.
தைவான் மீது உரிமை கொண்டாடிவரும் சீனா அவ்வப்போது அந்நாட்டைச் சுற்றிவளைத்து ராணுவ பயற்சியில் ஈடுபடுகிறது. இவ்வாறு தொடர்ந்து தைவானை அச்சுறுத்தும் சீன ராணுவம் தாக்குதல் நடத்தத் துணியாமல் இருப்பதற்கும் இந்த மலாக்கா நீரிணைதான் காரணமாக அமைந்திருக்கிறது. சீனா தைவானை தாக்கினால் சீனாவின் கப்பல்கள் மலாக்கா நீரிணை பிராந்தியத்தில் நுழைய இயலாத நிலை ஏற்படும்.
யார் இந்த தர்மன் சண்முகரத்தினம்? சிங்கப்பூர் அதிபர் போட்டியில் கவனம் ஈர்க்கும் தமிழர்!
சீனாவுக்கு எதிராக தைவானுக்கு தொடர்ந்து ஆதரவு காட்டிவரும் அமெரிக்காவுடன் இந்தியாவும் இணைந்து சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் என்று கருதப்படுகிறது. இதனால், சீனாவின் ஆதிக்கத்தை அடக்கி வைக்க மலாக்கா நீரிணையில் இந்திய தனது வலிமையை நிலைநாட்டுவதும் முக்கியத்துவம் வாய்ந்தாகப் பார்க்கப்படுகிறது.
இதற்காக இந்திய பெருங்கடலில் இந்திய விமானப் படை விமானங்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய விமானப்படையின் ரபேல், சுகோய் ரக போர் விமானங்களை இந்தியப் பெருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபடுத்துகிறது.
செருப்பு பிஞ்சிடும்... நடுரோட்டில் சில்மிஷம் செய்தவரை செருப்பைக் கழற்றி அடித்த மாணவி