யார் இந்த தர்மன் சண்முகரத்தினம்? சிங்கப்பூர் அதிபர் போட்டியில் கவனம் ஈர்க்கும் தமிழர்!
பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்தவர் தர்மன். ஆனால், அந்த வாய்ப்பு அவருக்குக் கைகூடவில்லை. இந்த முறை தர்மன் சண்முகரத்தினம் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர் என்று சொல்லப்படுகிறது.
சிறந்த பொருளாதார நிபுணரான தர்மன் சண்முகரத்தினம் 70.4 சதவீத வாக்குகளுடன் சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவர் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அதிபர் பதவியில் இருப்பார். தற்போதைய அதிபர் ஹலிமா யாக்கோபின் ஆறு ஆண்டு பதவிக்காலம் செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அவர் நாட்டின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகசுந்தரம், சிங்கப்பூரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க துணைத் அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முக்கிய உலகத் தலைநகரங்களின் வரிசையில் இணைந்துள்ளார்.
தர்மன் சண்முகசுந்தரம் 1957ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை எமரிட்டஸ் பேராசிரியர் கே. சண்முகரத்தினம், அந்நாட்டில் புற்றுநோய் பதிவேட்டை நிறுவியவர். புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நோயியல் தொடர்பான பல சர்வதேச அமைப்புகளுக்கு தலைமை தாங்கி இருக்கிறார். சிங்கப்பூரில் நோயியலின் தந்தை என்று கூறுப்படும் அளவு புகழ்பெற்ற விஞ்ஞானி.
அவர் சீன-ஜப்பானிய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் வழக்கறிஞரான ஜேன் யூமிகோ இட்டோகியை மணந்தார். சிங்கப்பூரில் இலாப நோக்கற்ற சமூகநல நிறுவனங்களிலும் கலைத்துறையிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகளும் தர்மன் உள்பட மூன்று மகன்களும் பிறந்தனர்.
தர்மன் சண்முகரத்தினம் தனது இளமை பருவத்தில் சுறுசுறுப்பான விளையாட்டு வீரராக இருந்தார். கல்வியின் ஒரு வடிவமாக விளையாட்டைப் பற்றி அவர் பேசியிருக்கிறார், “குழந்தைகள் விளையாட்டில் அணியாகச் செயல்படக் கற்றுக்கொள்கிறார்கள். பயிற்சியின் பலனாகக் கிடைக்கும் ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்கிறார்கள். நிபுணத்துவத்தை வளர்ப்பதற்கு இதைத் தவிர வேறு சிறந்த வழி இல்லை" என்கிறார். 2002 முதல் சீன எழுத்துக் கலையிலும் ஈடுபட்டு வருகிறார்.
தர்மன், தர்மன் சண்முகரத்தினம் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் கென்னடி ஸ்கூல் ஆஃப் கவர்மெண்ட் உள்ளிட்ட முக்கிய கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்றவர். பொருளாதார பட்டதாரியான இவர் அரசு வங்கி ஊழியராக தன் பணி வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், சிங்கப்பூர் நிதி ஆணைய தலைவராகவும் இருந்துள்ளார். துணைப் பிரதமராகவும், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர் என பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஒருங்கிணைப்புத் துறை அமைச்சராக செயல்பட்டுவந்த தர்மன், பொருளாதார திட்டங்களில் பிரதமருக்கு ஆலோசனைகள் வழங்கும் முக்கியத் தலைவராக உள்ளவர். சர்வதேச நிதியம் மற்றும் நிதிக் குழுவின் ஆசியா பிரிவு தலைவராகவும் இருந்தவர்.
ட்விட்டரில் டிக் வாங்கிய பயனர்களுக்கு மட்டும்... எலான் மஸ்க் வெளியிட்ட புதிய அறிவிப்பு
தர்மன் தொழில் ரீதியாக ஒரு பொருளாதார நிபுணர். பல்வேறு உயர்மட்ட சர்வதேச கவுன்சில்கள் மற்றும் குழுக்களுக்கு தலைமை தாங்கி இருக்கிறார். 2011 முதல் 2023 வரை சிங்கப்பூர் செலாவணி ஆணையத்தின் தலைவராகச் செயல்பட்டார். 2019 முதல் 2023 வரை சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டுக் கழகத்தின் (GIC) துணைத் தலைவராகவும் இருந்தார்.
பொருளாதார மற்றும் நிதித்துறை தலைவர்களின் உலகளாவிய கவுன்சில்களின் அறங்காவலர் குழுவில் தலைவராக பணியாற்றியுள்ளார். உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) அறங்காவலர் குழுவின் உறுப்பினராகவும், ஐ.நா. உச்சிமாநாட்டிற்கு பரிந்துரைகளை வழங்கும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
கார்கே பிரதமரிடம் கேட்ட கேள்விகளுக்கு கர்நாடக பாஜக எம்.பி.க்கள் பதில்!