Asianet News TamilAsianet News Tamil

IAF Plane Crash:மத்தியப்பிரதேசத்தில் இந்திய விமானப்படையின் மிராஜ், சுகோய் விமானங்கள் விபத்து:விமானி உயிரிழப்பு

மத்தியப் பிரதேசம் மாநிலம் மொரினா அருகே, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானங்கள் சுகோய்-30, மிராஜ்-2000 ஆகிய இரு விமானங்கள் வானில் மோதி விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்து நொறுங்கின.இதில் இரு விமானிகள் உயிர் பிழைத்த நிலையில் ஒருவர் உயிரிழந்தார்

Sukhoi 30 and Mirage-2000 Fighter Jets involved Crashed In Major Madhya Pradesh
Author
First Published Jan 28, 2023, 12:36 PM IST

மத்தியப் பிரதேசம் மாநிலம் மொரினா அருகே, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானங்கள் சுகோய்-30, மிராஜ்-2000 ஆகிய இரு விமானங்கள் வானில் மோதி விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்து நொறுங்கின.இதில் இரு விமானிகள் உயிர் பிழைத்த நிலையில் ஒருவர் உயிரிழந்தார்

திருப்பதி ஏழுமலையான் தரிசனம், தங்கும் வசதி இனி ஈஸி! புதிய மொபைல் செயலி அறிமுகம்

குவாலியர் விமானத் தளத்தில் இருந்து இன்று காலை சுகோ-30, மிராஜ் 2000 ரக பயிற்சி விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. ஆனால், மொரேனா அருகே வானில் இரு விமானங்கள் மோதிக்கொண்டு கிழேவிழுந்து நொறுங்கியதில்  தீப்பிடித்து எரிந்து சாம்பலாகின.

இந்தவிபத்தில் விமானத்தில் இருந்த இரு விமானங்களும் பாராசூட் மூலம் உயிர்தப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 3வது விமானியைத் தேடும் முயற்சியில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் ஈடுபட்டுள்ளது. இதில் மிராஜ் 2000 விமானத்தில் ஒரு விமானியும், சுகோய்-30 விமானத்தில் 2 விமானிகளும் இருந்தனர் இதில் இரு விமானிகள் உயிர் பிழைத்த நிலையில் ஒருவர் உயிரிழந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழகம் அல்லது மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்க வாய்ப்புள்ள கேப்டன் அமரிந்தர் சிங்?

மத்திய பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில் “ இந்த விமான விபத்துக் குறித்து விரைவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளிப்பார். விபத்து எவ்வாறு நடந்தது, வானில் மோதியதா, அல்லது தரையில் விழுந்து நொறுங்கியதா என்பது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios