இந்திய கடற்படைக்கு ஊக்கம் அளி்க்கும் வகையில் கல்வாரி கிளாஸ் நீர்மூழ்கி கப்பல்வகையில் ஐஎன்எஸ் வகிர் கப்பல் இன்று தேதச்துக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
இந்திய கடற்படைக்கு ஊக்கம் அளி்க்கும் வகையில் கல்வாரி கிளாஸ் நீர்மூழ்கி கப்பல்வகையில் ஐஎன்எஸ் வகிர் கப்பல் இன்று தேதச்துக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டு தொழில்நுட்பத்தின் உதவியுடன், மும்பையில் உள்ள மஜாகான் கப்பல் கட்டும் தளத்தில் ஐஎன்எஸ் வகிர் கட்டப்பட்டுள்ளது. இன்று நடக்கும் நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் தலைமையில் ஐஎன்எஸ் வகிர் படையில் சேர்க்கப்படுகிறது

ப்ராஜெக்ட்-75 திட்டத்தின் கீழ் நீர்மூழ்கிக்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்திய பெருங்கடல் பகுதியில் சீன ராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்துவரும்நிலையில் ஐஎன்எஸ் வகிர் வருகை இந்தியப் படையின் வலிமையை அதிகரிக்கும். ப்ராஜெக்ட் 75 திட்டத்தின் கீழ் ஸ்கார்பென் வடிவத்தில் 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்பட உள்ளன. ஏற்கெனவே 4 நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்பட்டுள்ளன.
அதாவது, கல்வாரி, காந்தேரி, கரன்ஜ், மற்றும் வேலா ஆகிய நீர்மூழ்கிக்கப்பல்கள் கட்டப்பட்டு படையில் சேர்க்கப்பட்டுள்ளன, ஐஎன்எஸ் வகிர் 5வது கப்பலாகும். இதில் 6வது நீர்மூழ்கிக்கப்பல் வக்ஸீர் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் நிறைவடைந்தபின் விரைவில் படையில் சேர்க்கப்படும்.
ஐஎன்எஸ் வகீர் நீர்மூழ்கிக் கப்பல், நீருக்கு அடியில் எதிரிநாட்டு கப்பல் மீது தாக்குதல் நடத்தி அழிக்கும் வலிமை கொண்டது. ஏவுகணையை நீருக்கு அடியிலும், வானிலும் ஏவ முடியும்.
ஒரு ஓட்டுக்கு ரூ.6,000 என்ற கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர்... மறுப்பு தெரிவித்த கட்சி!!
இந்தியாவிடம் இதற்கு முன் இருந்த ஐஎன்எஸ் வகிர் 1973, நவம்பர்1ம் தேதி படையில்சேர்க்கப்பட்டு, ஏறக்குறைய 30 ஆண்டுகள் பணியாற்றி, 2001ம் ஆண்டு ஓய்வு பெற்றது. ஸ்கார்பென் வகையைச் சேர்ந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள், வானிலும், நீருக்கு அடியிலும் தாக்குதல் நடத்த முடியும், ஏவுகணைகளை ஏவ முடியும், கண்காணிப்பு, குண்டுவெடிப்பு தடுப்பு, உளவுபார்த்தல் ஆகியவற்றை செய்யலாம்.

என்என்எஸ் வகிர் குறித்து கடற்படை வெளியிட்ட அறிவிப்பில் “ ஐஎன்எஸ் வகிர் வருகையால் கப்பற்படையின் வலிமை மேலும்அதிகரிக்கும். உளவு, கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் முக்கிப் பங்கு வகிக்கும். வகிர் என்றால் சுறா. துணிச்சல், அச்சமில்லாததன்மை ஆகியவற்றை ஒருங்கே கொண்டிருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் மரணத்தின் பின்னணி என்ன?
உலகிலேயே தலைசிறந்த சென்சார் தொழில்நுட்பம் வகிர் கப்பலில் பொறுத்தப்பட்டுள்ளது. நவீன துப்பாக்கிகள், கடலில் இருந்து கடலுக்குள் ஏவுகணைகளை செலுத்தும் வசதி, கடலில் இருந்து வானில் இலக்குகளை தாக்குதல், கடலில் இருந்து நிலத்தில் இலக்குகள் மீது தாக்குல் நடத்தும் வலிமை வகிர் கப்பலுக்கு உண்டு” எனத் தெரிவித்துள்ளது
இந்தியப் பெருங்கடலில் சீன ராணுவத்தின் நடமாட்டாம், கண்காணிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஐஎன்எஸ் வகிர் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
