Asianet News TamilAsianet News Tamil

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து... அனைவரும் ஆல் பாஸ்... முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை மொத்தம் 8000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Students till class 8 to be promoted without exams...yogi adityanath announcement
Author
Uttar Pradesh, First Published Mar 18, 2020, 12:40 PM IST

உத்தரபிரதேசத்தில் கொரோனா எதிரொலியாக அரசு பள்ளிகள் மூடப்பட்டதால் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் பாஸ் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

Students till class 8 to be promoted without exams...yogi adityanath announcement

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை மொத்தம் 8000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

Students till class 8 to be promoted without exams...yogi adityanath announcement

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மார்ச் 23 முதல் மார்ச் 28 வரை தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக ஏப்ரல் 2-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் தேர்வு இன்றி மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்கின்றனர். இதனையடுத்து, தேர்வு எழுதாமல் அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பை முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா காரணமாக மார்ச் 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Follow Us:
Download App:
  • android
  • ios