அடுத்த முறை, தயவுசெய்து உங்கள் உதவியை நாடும் நபர்களிடம் குறிப்பாக மாணவர்களிடம் தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள்’ என்று மாணவி ஆசிரியருக்கு கூறிய ஸ்க்ரீன் ஷாட் தற்போது வைரலாகி வருகிறது.

ஒரு மாணவி தனது டியூஷன் ஆசிரியருடன் பேசிய வாட்சப் செய்தியை ட்விட்டரில் பகிர, எல்லா சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நானும், எனது ப்ரண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளிவரும் போது, என்னுடைய டியூஷன் டீச்சருக்கு குறுந்செய்து அதாவது மெசேஜ் செய்யலாம் என்று முடிவெடுத்தோம் என்று பதிவிட்டுள்ளார். 

Scroll to load tweet…

அந்த மாணவி வெளியிட்ட ஸ்க்ரீன்சாட்டில், ‘12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தான் தேர்ச்சி பெற்றதாகவும், வழிகாட்டுதல் தேவைப்படும் மாணவர்களிடம் கருணை காட்டுமாறு ஆசிரியருக்கு நினைவூட்டுவதாகவும் அவர் ஆசிரியரிடம் தெரிவித்தார். வணக்கம் மேடம். நான் பத்தாம் வகுப்பு 2019-2020 பேட்ச்சில் உங்கள் மாணவர்களில் ஒருவராக இருந்தேன். நான் பள்ளியில் தேர்ச்சி பெற மாட்டேன் என்று சொன்னீர்கள். 

மேலும் செய்திகளுக்கு..திருவள்ளூர் மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்.. சகோதரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

எல்லா நேரங்களிலும் என்னை நீங்கள் தாழ்த்தி பேசினீர்கள். இன்று, நான் எனது 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். நான் எப்போதும் விரும்பும் பல்கலைக்கழகத்தில் நுழைந்துள்ளேன். மேலும் நான் செய்ய நினைத்த பாடத்தை நானும் தேர்வு செய்து இருக்கிறேன். எனவே, இது ஒரு நன்றி செய்தி அல்ல. ஆனால் நான் அதை செய்தேன் என்பதை உங்களுக்குக் காண்பிப்பதற்காக அல்ல. 

Scroll to load tweet…

அடுத்த முறை, தயவுசெய்து உங்கள் உதவியை நாடும் நபர்களிடம் குறிப்பாக மாணவர்களிடம் தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார். இந்த உரையாடலின் ஸ்கிரீன் ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !