தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது என ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா குழு பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை அளித்துள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கடந்த மே மாதம் போராட்டம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டு சீல் வைக்கப்பட்டது. 

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்தது. இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது. 

இந்த உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மற்றும் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த சூழலில் மூவர் குழு அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொண்டது. 

பின்னர் ஆய்வுக்குழு சீல் ஈடப்பட்ட அறிக்கை ஒன்றை 2 நாட்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது. ஆலையை மூட உத்தரவிட்டது இயற்கை நியதிக்கு முரணானது. முறையாக நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.