இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், கொரோனாவை தடுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24,500ஐ கடந்து 25 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை 780 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 310 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தவர்கள்.

கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனாவிலிருந்து அதிகமானோர் குணமடைந்துவரும் நிலையில், மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை தினமும் தாறுமாறாக அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதிகமானோர் குணமடைவதில்லை. அது பெரும் சோகம் தான் என்றாலும், தொடர்ச்சியாக தடுப்பு பணிகளும் சிகிச்சைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 6926 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய வடமாநிலங்களில் பாதிப்பு கடுமையாக உள்ளது. 

மாநில வாரியாக பாதிப்பு விவரத்தை பார்ப்போம்..

மகாராஷ்டிரா - 6926

டெல்லி - 2523

குஜராத் - 2815

மத்திய பிரதேசம் - 1852

ராஜஸ்தான் - 2061

உத்தர பிரதேசம் - 1778

தமிழ்நாடு - 1755

ஆந்திரா - 1016

தெலுங்கானா - 984

மேற்கு வங்கம் - 571

கர்நாடகா - 489

கேரளா - 450

ஜம்மு காஷ்மீர் - 454

பஞ்சாப் - 298

ஹரியானா - 272

அந்தமான் நிகோபார் - 29

அருணாச்சல பிரதேசம் - 1

அசாம் - 36

பீகார் - 223

சண்டிகர் - 27

சத்தீஸ்கர் - 37

ஹிமாச்சல பிரதேசம் - 41

ஜார்கண்ட் - 63

மேகாலயா - 12

உத்தரகண்ட் - 48

ஒடிசா - 94

லடாக் - 20.