Asianet News TamilAsianet News Tamil

இறுதி சடக்கு பேக்கேஜ்… அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஸ்டார்ட் அப் நிறுவனம்!!

டெல்லியில் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள மும்பையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

startup company provides funeral service which belongs to mumbai
Author
First Published Nov 23, 2022, 7:22 PM IST

டெல்லியில் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள மும்பையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்த நிலையில் மும்பையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த சுகந்த் இறுதி சங்கு மேலாண்மை என்ற அந்த தனியார் நிறுவனம், ஒரு மனிதனின் இறுதி சடங்கை பேக்கேஜ் முறையில் செய்து வருகிறது.

இதையும் படிங்க: குஜராத் தேர்தல்: 12 அதிருப்தியாளர்கள் 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட்: பாஜக அதிரடி

முன்பதிவு செய்யும் வசதியும் இதில் உள்ளது. இந்த நிறுவனம் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் இறந்தவர்களின் உடலை வைப்பதற்கான பாடையை மூங்கில் கட்டையால் செய்து அதை பூக்களால் அலங்கரித்து வைத்துள்ளது. இந்த நிறுவனத்தில் முன்பதிவு செய்தால் இறுதிச் சடங்கு செய்வதற்கான பண்டிதர்கள், முடி திருத்தம் செய்பவர், இறந்தவர்களை தூக்குவோர், சடலத்துடன் நடப்பவர், மந்திரங்களை ஓதுவர் போன்ற அனைத்தையும் அந்த நிறுவனமே ஏற்பாடு செய்யும். இதுமட்டுமின்றி இறந்தவரின் அஸ்தியை எங்கு கரைக்க வேண்டுமோ அங்கேயே கொண்டுச் சென்று அந்த நிறுவனமே கரைத்து விடும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அமெரிக்கா செல்ல வேண்டுமா? விசா பெறுவதற்கு மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!!

இவை அனைத்திற்கும் 38,000 ரூபாய் கட்டணமாக அந்த நிறுவனம் வசூலிப்பதாகவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து அந்த நிறுவனம் கூறுகையில், இதுவரை ஐந்து ஆயிரம் இறுதிச் சடங்குகளை செய்து முடித்து கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளோம். எதிர்காலத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை எட்டும் அளவுக்கு இலக்கும் நிர்ணயித்துள்ளோம் என்று தெரிவித்தது. இந்த நிறுவனம் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் கலந்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios