காஷ்மீரில் தொழில்துறை மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 5 லட்சம் ஏக்கர் பரப்பில் புதிய ஷாப்பிங் மால் கட்டப்பட உள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மூலம் உள்ளூர் மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதன் முதல் படியாக மார்ச் 19ஆம் தேதி ஸ்ரீநகரில் 5 லட்சம் சதுர அடி பரப்பில் ஷாப்பிங் மால் கட்டுவதற்காக துபாயைச் சேர்ந்த ஈ.எம்.ஏ.ஏ.ஆர். (EMAAR) குழுமம் அடிக்கல் நாட்டியுள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீருக்குக் கிடைத்துள்ள முதல் நேரடி அன்னிய முதலீடு இதுவாகும்.
இந்த பிரம்மாண்டமான ஷாப்பிங் மால், மேற்கு ஆசியா முழுவதும் சூப்பர் மார்க்கெட்டுகளை நடத்தும் அபுதாபியைச் சேர்ந்த லூலு குழுமம் மூலம் நடத்தப்படும். இதுபற்றி அந்தக் குழுமத்தின் தலைவர் எம்.ஏ.யூசுப் அலி கூறுகையில், ஈஎம்ஏஏஆர் பிராபர்டீஸ் நிறுவனத்தால் கட்டப்பட்டு வரும் இந்த மாலில் ஹைப்பர் மார்க்கெட் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளோம் என்றார்.
லுலு குழுமம் ஏற்கெனவே காஷ்மீரில் இருந்து ஆப்பிள், குங்குமப்பூ மற்றும் உலர் பழங்களை ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. தவிர, ஈஎம்ஏஏஆர் குழுமம் காஷ்மீரில் தனது வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்த விரும்புகிறது. அதன்படி வரும் மாதங்களில் ரியல் எஸ்டேட் திட்டங்களில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
நிரவ் மோடி கம்பெனியின் பேலன்ஸ் ரூ.236 தான் இருக்காம்! பாக்கியை வசூலிப்பது எப்படி?
ஓராண்டுக்கு முன்பு, ஜம்முவில் நடந்த ரியல் எஸ்டேட் உச்சிமாநாட்டில் மொத்தம் 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரூ.19,000 கோடி மதிப்பில் கையெழுத்தாயின. அதில், குடியிருப்புகளுக்காக மட்டும் 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வணிகத்துறையிலும் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
காஷ்மீர் பள்ளத்தாக்கு வளர்ச்சி மற்றும் தொழில்துறை திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து முக்கிய நீரோட்டத்திற்கு கொண்டு வர அரசாங்கம் முயற்சித்து வருகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நீண்ட காலமாக ஒரு நிலையற்ற சூழ்நிலையைக் கண்டது; இனிமேல் நிலைமை மாறும் என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்.
"எல்லோரும் அமைதி மற்றும் செழிப்பை விரும்புகிறார்கள். ஜம்மு & காஷ்மீரில் நிறைய முதலீடுகள் வருவது இங்குள்ள இளைஞர்களுக்கு சம்பாதிக்க புதிய வழிகளைத் திறக்கும்" என்று உள்ளூர்வாசி ஒருவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
இந்திரா காந்தி ஆட்சியில்தான் இப்படி எல்லாம் நடக்கும்: அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
ஆகஸ்ட் 2019 க்கு முன்பு - அதாவது 370வது பிரிவை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டபோது - ஜம்மு காஷ்மீர் ரூ.14,000 கோடி முதலீடுகளை மட்டுமே கண்டுள்ளது. இப்போது, சூழ்நிலை மாறிவிட்டது. ஒரு காலத்தில் பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டிருந்த பகுதியில் இப்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள்கூட ஆர்வம் காட்டுகின்றனர்.
நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், நடப்பு நிதியாண்டில் ஜனவரி வரை ஜம்மு - காஷ்மீர் ரூ.1,547 கோடி முதலீடுகளைப் பெற்றுள்ளதாகவும், ரூ.64,058 கோடி மதிப்பிலான திட்டங்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் பெற்ற முதலீடுகள் குறித்த தகவலையும் அவர் பகிர்ந்துள்ளார். 2021-22ல் ரூ.376.76 கோடி, 2020-21ல் ரூ.412.74 கோடி, 2019-20ல் ரூ.296.64 கோடி, 2018-19ல் ரூ.590.97 கோடி, 2017-18ல் ரூ.840.55 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஜம்மு காஷ்மீருக்கு வந்துள்ளன எனக் கூறி இருக்கிறார்.
கடந்த மாதம், ஜேஎஸ்டபிள்யூ (JSW) குழுமம் 1.2 லட்சம் மெட்ரிக் டன் வண்ணம் பூசப்பட்ட எஃகு உற்பத்தி அலகு நிறுவுவதற்கான திட்டத்தை அறிவித்திருப்பதும் நினைவூட்டத்தக்கது.
காதலை எதிர்த்த அண்ணனை வெட்டிக் கூறு போட்ட தங்கை 8 ஆண்டுகளுக்குப் பின் கைது!
