ஸ்பைஸ்ஜெட் புதுச்சேரி-பெங்களூரு-ஹைதராபாத் சேவையை தற்காலிகமாக நிறுத்துகிறது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிரபல விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் தற்போது பயணிகளுக்கு அதிர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹைதராபாத்-புதுச்சேரி வழித்தடத்தில் விமானத்தின் பயணிகள் வருகை வலுவாக இருப்பதாகவும், வார நாட்களில் தோராயமாக 80 சதவீதமாகவும், வார இறுதி நாட்களில் 90 முதல் 95 சதவீதமாகவும் இருக்கும் என்று கூறியுள்ளது.

அதேபோல், புதுச்சேரி-பெங்களூரு வழித்தடத்தில் வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் 40 முதல் 50 சதவீதம் வரை ஆக்கிரமிப்பு விகிதம் பதிவாகியுள்ளது. இந்தநிலையில், ஹைதராபாத்-புதுச்சேரி-பெங்களூரு இடையே சேவையை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் இந்த தற்காலிக இடைநிறுத்தம், ஹஜ் யாத்ரீகர்களின் தேவைகளுக்கு இடமளிக்கும் வகையில் ஸ்பைஸ்ஜெட்டி யாத்ரீகர்களை அழைத்து வரும் சிறப்பு விமானங்களோடு இணைய உள்ளது. இதனால்தான், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூரு செல்லும் விமானங்களை தற்காலிகமாக நிறுத்துகிறது.
