மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயம்.. சுற்றுலா பயணிகள் கதி என்ன.? பரபரப்பு
டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகிக் கிடப்பதைக் காணச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லப் பயன்படுத்திய நீர்மூழ்கிக் கப்பல் இப்போது திடீரென மாயமாகியுள்ளது.
1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 மற்றும் 15 ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் டைட்டானிக் மூன்றே மணிநேரத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது.மூழ்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்ட கப்பல் மூழ்கியது. இந்த விபத்தில் சுமார் 1500 பேர் உயிரிழந்தனர். விபத்துக்குப் பிறகு, கனடாவிலிருந்து 650 கிலோமீட்டர் தொலைவில் 3,843 மீட்டர் ஆழத்தில் கப்பல் இரண்டாக உடைந்தது.
மேலும் இரண்டு பகுதிகளும் ஒன்றோடொன்று 800 மீட்டர் தொலைவில் இருந்தன. ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் படத்தை எடுத்த பிறகு, அது டைட்டானிக் புகழை அப்படியே வைத்திருக்க உதவியது.அட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கிச் சிதிலமடைந்து கிடக்கும் பகுதியில் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அப்போது தான் அது அங்கே இருந்த பனிப்பாறைகளில் மோதி விபத்தில் சிக்கியதைக் கண்டுபிடித்தனர்.
ஆய்வுப் பணிகள் ஒரு பக்கம் நடக்கும் அதேநேரத்தில் நீருக்கு அடியே இருக்கும் டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைக் காணச் சுற்றுலாப் பயணிகள் நீர் மூழ்கிக் கப்பல் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு வந்தனர். நேற்றைய தினம் இந்தக் கப்பல் வழக்கம் போலக் கிளம்பிய நிலையில், அது மாயமானதாகக் கூறப்படுகிறது.
காணாமல் போன கப்பல், கனேடிய மற்றும் பாஸ்டன் கடலோரக் காவல்படையினரால் தேடப்பட்டு வருகிறது, இது டூர் ஆபரேட்டரான OceanGate Expeditions க்கு சொந்தமானது ஆகும். ஆடம்பர சாகசப் பயணங்களை வழங்கும் OceanGate Expeditions, கப்பல் ஒன்று காணாமல் போனதை உறுதிப்படுத்தி உள்ளது.
கடலோரக் காவல்படையானது தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது. காணாமல் போனபோது அதில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெரியவில்லை. டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் 96 மணிநேரம் மட்டுமே உயிருடன் இருக்க முடியும் என்று OceanGate இன் இணையதளம் தெரிவித்துள்ளது.
டைட்டானிக் கப்பல் மூழ்கி 110 ஆண்டுகளைத் தாண்டிவிட்ட நிலையில், இன்னும் அதன் துரதிஷ்டம் தொடர்கிறது. நீரில் மூழ்கிக் கிடக்கும் அதன் இடிபாடுகளைப் பார்க்கச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகியுள்ளது. உள்ளே இருந்தவர்களுக்கு சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருப்பதால் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தங்கத்தை விடுங்க.. தங்க பத்திரம் வாங்குங்க - எங்கே, எப்படி, எவ்வாறு? முழு விபரம்