Asianet News TamilAsianet News Tamil

இருட்டறைக்குள் தள்ளப்பட்ட குடிமகனின் மகள் நான்… இணையத்தில் வைரலாகும் கேரள பத்திரிகையாளர் மகளின் பேச்சு!!

கைது செய்யப்பட்டுள்ள கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் மகள் சுதந்திர தின விழாவில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

speech of mehnaz kappan daughter gone viral in internet
Author
India, First Published Aug 15, 2022, 7:17 PM IST

கைது செய்யப்பட்டுள்ள கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் மகள் சுதந்திர தின விழாவில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் தலித் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது குறித்து செய்தி சேகரிக்க டெல்லியில் பணியாற்றிய கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பான், ஹத்ராஸ் செல்லும் வழியில் கைதானார். தலித் சிறுமி வன்கொலை விவகாரத்தை வைத்து தன்னுடைய அரசுக்கு எதிராக சிலர் சதி செய்வதாக ஆதித்யநாத் கூறிவந்த நிலையில், செய்தி சேகரிக்கச் சென்ற கப்பானையும் அவருடன் சென்ற மூவரையும் ஆதித்யநாத் அரசு கைது செய்தது. இதைத் தொடர்ந்து ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. சித்திக் கப்பன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இரும்புச் சங்கிலியால் கட்டிலுடன் சித்திக் பிணைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: நலத்திட்டங்களை இலவசங்கள் என கொச்சைப்படுத்துவது வேதனை: பாஜகவை கிழித்த தெலங்கானா முதல்வர்

அவர் தற்போது வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பள்ளியில் நடைபெற்ற சுதந்திர விழா ஒன்றில் பேசிய சித்திக் கப்பனின் மகள், நான் மெஹனாஸ் கப்பன். பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் மகள், குடிமகனின் அனைத்து சுதந்திரத்தையும் உடைத்து இருட்டு அறைக்குள் தள்ளப்பட்ட குடிமகனின் மகள். காந்திஜி, நேரு, பகத்சிங் மற்றும் பல புரட்சித் தலைவர்களின் வாழ்நாள் போராட்டங்கள் இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்திற்கு வழிவகுத்தன. தற்போது, ஒவ்வொரு இந்தியனுக்கும் என்ன சாப்பிட வேண்டும், எந்த மதத்தை கடைபிடிக்க வேண்டும், என்ன பேச வேண்டும் மற்றும் பிற அம்சங்களை தேர்வு செய்யும் சுதந்திரம் உள்ளது. எங்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளை பாதிக்கக்கூடிய எதற்கும் எதிராக போராட்டம் நடத்த எங்களுக்கு முழு உரிமை உள்ளது.

இதையும் படிங்க: இலவச கல்வி, மருத்துவம் ஏழ்மையை ஒழிக்கும்: தேர்தல் இலவசங்கள் அல்ல: மோடிக்கு கெஜ்ரிவால் பதில்

இருப்பினும், அநீதி மற்றும் மோதல்கள் இன்றும் உள்ளன. அரசியல், மதம் மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் மோதல்கள் மற்றும் தாக்குதல்களைத் தூண்டுகிறது. இந்த அநீதிகள் அனைத்தையும் வேரோடு பிடுங்குவதற்கு அன்பையும் நல்லிணக்கத்தையும் பயன்படுத்துவோம். அமைதியின்மையின் நிழல் கூட துடைக்கப்பட வேண்டும். நாம் இன்னும் இந்தியாவை சிறந்த உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். பிரிவினையும் முரண்பாடும் இல்லாத ஒரு நல்ல நாளைக் கனவு காண வேண்டும். இந்திய விடுதலைக்காகப் போராடிய வீரமிக்க தேசபக்தர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து, இந்தியாவின் சாமானிய குடிமக்களின் சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது என்பதை இங்கு நிறுத்திக் கொள்கிறேன். ஜெய் ஹிந்த், ஜெய் பாரத் என்று தெரிவித்தார். இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios