செப் 18 முதல் 22 வரை சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர்: மத்திய அரசு அறிவிப்பு
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் செப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வியாழக்கிழமை அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தொடரில் 5 அமர்வுகள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மழைக்காலக் கூட்டத்தொடருக்குப் பின் குளிர்காலக் கூட்டத்தொடர் தான் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும். ஆனால், அதற்கு முன்பாக செப்டம்பர் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.
சுழன்று விளையாடிய பிரக்யான் ரோவர்! பார்த்து ரசித்த விக்ரம் லேண்டர்! இஸ்ரோ சொன்ன குட்டி ஸ்டோரி!
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும். அமிர்த காலத்தின் மத்தியில் நாடாளுமன்றத்தில் பயனுள்ள விவாதங்கள் நடத்துவதற்கு காத்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து அமர்வுகள் இருக்கும் என்று கூறியிருந்தாலும், இந்தச் சிறப்புக் கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல்களில் குறித்து இந்தத் தகவலையும் அரசு தரப்பில் வெளியிடவில்லை.
2023ஆம் ஆண்டுக்கான மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 17ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடந்தது. இந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் வன்முறை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பினர். அதற்கு பிரதமர் பதில் சொல்லாமல் இருந்ததால், அவரை மணிப்பூர் விவகாரம் பற்றிப் பேச வைப்பதற்காக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
மூன்று நாள் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. ஆகஸ்ட் 8ஆம் தேதி பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் விமர்சங்களுக்கு பதில் அளித்துப் பேசினார். முடிவில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
140 கோடி இந்தியர்களை வேவு பார்க்க இஸ்ரேல் கருவிகளை வாங்கும் மோடி அரசு!