திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கெட் ரூ.300 விலையில் இன்று வெளியிடப்படுகிறது.
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கெட் ரூ.300 விலையில் இன்று வெளியிடப்படுகிறது.
இன்று காலை 10 மணி முதல் ஆன்-லைனில் தொடங்கும் முன்பதிவு மூலம் இந்த டிக்கெட்டுகளைப் பெறலாம். இந்த டிக்கெட் ஒன்றின் விலை ரூ.300 என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்தி தேவஸ்தானம் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ ஜனவரி 12 முதல் 31ம் தேதிவரையிலான சிறப்பு தரிசன டிக்கெட் ரூ.300 விலையில் ஜனவரி 9ம் தேதி முதல் முன்பதிவு தொடங்குகிறது. பக்தர்கள் அனைவரும் ஜனவரி 9ம் தேதி காலை 10 மணி முதல் முன்பதிவு செய்யலாம். பாலாலயம் காரணமாக, பிப்ரவரி 22 முதல் 28ம் தேதிவரை வரை சர்வ தரிசனம் அனுமதி கிடையாது”எனத் தெரிவித்துள்ளது.
வைகுண்ட ஏகாதசி கடந்த 2ம் தேதி கொண்டாடப்பட்டது அதையொட்டி பக்தர்கள் வருகைக்காக சிறப்பு வாயில் திறக்கப்பட்டுள்ளது, இந்த வாயில் வரும் 11ம் தேதிவரை திறந்திருக்கும். திருமலை திருப்பதிக்கு தினசரி ஏறக்குறைய 50ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். திருப்பதி தேவஸ்தானத்தின் அறிக்கையின்படி, 2022 டிசம்பர் 23ம் தேதி 62,055 பேர் தரிசனம் செய்துள்ளனர்.
பிரதமர் மோடியின் அம்மாவின் அஸ்தி கங்கையில் கரைப்பு

ஆண்டுதோறும் நடக்கும் அந்தயாயனோத்ஸவம் கடந்த டிசம்பர் 23ம் தேதி ரங்கநாயகுல மண்டபத்தில் தொடங்கியது. வைகுண்ட ஏகாதசிக்கு 11 நாட்கள் முன்பாகத் தொடங்கும் இந்த விழா 25 நாட்கள் நடக்கும், ஜனவரி 15ம் தேதியுடன் முடிகிறது.
ஜோஷிமத் நிலை என்ன? முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை
இந்த விழாவின் சிறப்பு என்பது, 12 ஆழ்வார்களின் 4ஆயிர திவ்யபிரபந்தம் தினசரி பாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
