பிரதமர் மோடியின் அம்மாவின் அஸ்தி கங்கையில் கரைப்பு
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் அஸ்தி சனிக்கிழமை கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி கடந்த டிசம்பர் 30ஆம் தேதி தனது 99வது வயதில் மரணம் அடைந்தார். நேற்று, சனிக்கிழமை, அவரது அஸ்தி உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் நகரில் பாயும் கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் தம்பி பங்கஜ் மோடி அதற்குரிய சடங்குகளைச் செய்து அஸ்தியை கங்கையில் கரைத்தார்.
அர்ப்பணிப்பின் உருவமான அம்மா! ஹீராபென் மோடி வாழ்க்கை வரலாறு
எந்தவிதமான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யாமல் எளிமையாக இந்த நிகழ்வு நடந்துள்ளது. அரசு அதிகாரிகளுக்கோ பாஜக கட்சியினருக்கோ இதுபற்றி முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை.
இந்தச் சடங்கை மட்டும் முடிந்துவிட்டு பங்கஜ் மோடி வீடு திரும்பிவிட்டார்.