நாடுமுழுவதும் மாற்றுத்திறனாளிகள் ரெயில் பெட்டிகளில் எளிதாக ஏறவும், இறங்கவும், சுகமாக பயணம் செய்யவும் அவர்களுக்கு ஏற்றார்போல் இருக்கும் ரெயில் பெட்டிகளை ரெயில்வை துறை தயார் செய்து வருகிறது.

இது குறித்து மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையர் கமலேஷ் பாண்டேநாக்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
மாற்றுத்திறனாளிகள் ரெயில்களில் எளிதாகவும் பயணம் செய்ய அவர்களுக்கு ஏற்றார் போல் பிரத்யேக ரெயில் பெட்டிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறவும் இறங்கவும் முடியும். கழிப்பறைகள், இருக்கைகள், படுக்கைகள் என அனைத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. 

2018ம் ஆண்டுக்குள் 3 ஆயிரம் பெட்டிகள் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இந்த பெட்டிகளில் மாற்றுத் திறனாளிகள் சென்று வர அதிகமான இடவசதியும், விரிவான இருக்கை, இடவசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.