தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரம் ஆகிய மாநில எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்" என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

அனைவருக்கும் நல்வாழ்வு' திட்டத்தின் கீழ், குன்னுார் அருகே உள்ள ஜெகதளாவில் நல்வாழ்வு மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். பின்னர்  அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. தமிழகம்-கேரளா மற்றும் கர்நாடகா-ஆந்திரம் ஆகிய எல்லைப் பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடத்த இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. 

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கூடாது என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாறுதல், பல நாடுகளுடன் கொண்டுள்ள உறவு இவற்றை கருத்தில் கொண்டுதான் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மத்திய அரசால் முடியாது. ஏனெனில் இதற்கென்று உள்ள குழுதான் இதைப்பற்றி முடிவு செய்ய முடியும்.