Asianet News TamilAsianet News Tamil

Jharkhand: Hemant Soren:ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா? ஜார்க்கண்ட் ஆளுநர் இன்று முடிவு

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் எம்எல்ஏ பதவியை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த நிலையில், அதன் மீது ஆளுநர் இன்று முடிவு எடுப்பார் எனத் தெரிகிறது.

Sorens 'disqualification' as MLA: J'khand Guv to make decision on Friday
Author
Ranchi, First Published Aug 26, 2022, 11:56 AM IST

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் எம்எல்ஏ பதவியை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த நிலையில், அதன் மீது ஆளுநர் இன்று முடிவு எடுப்பார் எனத் தெரிகிறது.

ஒருவேளை ஆளுநர் தகுதி நீக்கம் செய்தால், அடுத்த முதல்வராக யாரை நியமிக்கலாம் என்று ஆலோசிக்க ஐக்கிய முற்போக்குக்கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தை ஹேமந்த் சோரன் கூட்டியுள்ளார்.

Ghulam Nabi Azad: congress : குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து திடீர் விலகல்

81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு 49 எம்எல்ஏக்கள் பலம் இருப்பதால், ஆட்சி கவிழ்வதற்கு வாய்ப்பு மிகக் குறைவு. ஹேமந்த் சோரன் பதவி போனாலும், 48 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள், பெரும்பான்மைக்கு 42 எம்எல்ஏக்கள் மட்டும்தான் தேவை. ஆதலால் ஆட்சி கவிழ்வதற்கு வாய்ப்பில்லை.

ஜார்க்கண்ட் மாநில சுரங்கத்துறை சார்பில் 2021ம் ஆண்டு சுரங்க ஒதுக்கீட்டை தன் பெயருக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் ஒதுக்கிக்கொண்டார். இது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசு லாபங்களைப் பெறுகிறார் என்று எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் பாஜக மனு அளித்து, ஹேமந்த் சோரன் மீது நடவடிக்கை எடுக்கக் கூறியது. உச்ச நீதிமன்றத்திலும் பாஜக சார்பில் வழக்குத் தொடர்ந்தது

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு: 5 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு

இதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, ஹேமந்த் சோரன் எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து ஆளுநர் ரமேஷ் பாயிஸுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இதுவரை ஆளுநர் ரமேஷ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

ஆனால் தேர்தல் ஆணையமோ நிச்சயமாக ஹேமேந்த் சோரன் தகுதி நீக்கம் செய்யப்படுவார், தேர்தல் விதிமுறைகளை மீறிவிட்டார் என்று நம்புகிறது. ஆனால், ஹேமந்த் சோரன் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தெரிவித்துள்ளது.

இதனால் ஆளுநர் ரமேஷ் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் ரமேஷ் பயாஸ் நிருபர்களிடம் கூறுகையில் “ நான் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளேன். ஆளுநர் மாளிகைக்கு சென்றபின்புதான் அங்குள்ள நிலை குறித்து தெரிவிக்க இயலும்” எனத் தெரிவித்துள்ளார்

கோதுமை மாவு ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு

ஆனால் முதல்வர் ஹேமேந்த் சோரன் கூறுகையில் “ பாஜகவின் ஆட்சியில்  அரசியலமைப்புசார்ந்த அமைப்புகள் அனைத்தும் அப்பட்டமாக தவறாகப் பயன்படுத்துகிறது இது வெட்கக்கேடானது.  தேர்தல் ஆணையத்திடம் இருந்தோ அல்லதுஆளுநர் மாளிகையிலிருந்தோ முதல்வர் அலுவலகத்துக்கு இதுவரை எந்த கடிதமும் வரவி்ல்லை” எனத் தெரிவித்தார்

இதற்கிடையே ஒருவேளை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டால், புதிய முதல்வராக யாரைத் தேர்ந்தெடுப்பது குறித்து இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆலோசனைக் கூட்டத்துக்கு ஹேமந்த் சோரன் அழைப்பு விடுத்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios