cji: cji nv ramana: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு: 5 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் கடைசியாக 5 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்க உள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் கடைசியாக 5 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்க உள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் நேற்று இரவு குறிப்பிட்டபடி, இன்று 5 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்குகளிலும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா கோலி, சிடி ரவிகுமார்தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது
தேர்தல் இலவசங்கள்
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அளி்க்கும் முறையற்ற இலவசங்களையும் அறிவிப்புகளையும்தடை செய்யக் கோரி பாஜக தலைவர் அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
தேர்தல் இலவசங்கள் குறித்து கடந்த சில வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பிலும் பல்வேறு கட்சிகள் தரப்பிலும் கடும் வாதம் நடந்தது. கடந்த புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பல்வேறு அம்சங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும், அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல் வாக்குறுதி குறித்தும் உத்தரவிட முடியுமா என்பதுகுறித்து ஆலோசிக்க வேண்டும்.
இலவசங்களுக்கும், நலத்திட்ட உதவிகளுக்கும் வேறுபாடு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
பெகாசஸ் வழக்கு: மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை:விசாரணைக் குழு உச்ச நீதிமன்றத்தில் தகவல்
2007 கோரக்பூர் கலவரம்
2007ம் ஆண்டு கோரக்பூரில் நடந்த கலவரத்துக்கு தற்போது உ.பி. முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் பேசிய பேச்சு காரணம். மொஹரம் பண்டிகையன்று பாஜக தலைவர்கள் பேசிய பேச்சால் இரு சமூகத்துக்கு இடையே நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதில் ஆதித்யநாத் மீது விசாரணை நடத்தக் கோரி உ.பி. சமூக செயற்பாட்டாளர் பர்வேஸ் பர்வாஸ் என்பவர் அலகாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆதித்யநாத் மீது சிபிஐ விசாரணையும் மனுதாரர் கோரியிருந்தார்.
இதற்கு உ.பி. அரசு மறுத்துவிட்டது. உ.பி. அரசின் உத்தரவையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில்தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தலைமைநீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது
wheat flour export: கோதுமை மாவு ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு
கர்நாடக சுரங்க வழக்கு
கர்நாடகத்தில் சட்டவிரோதமாக சுரங்கங்கள் பல செயல்படுகின்றன அவற்றை மூடக் கோரி சமாஜ் பரிவர்தன் சமுதாய எனும் தொண்டுநிறுவனம் கடந்த 2009ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்துத.
ஆனால், 2013ம் ஆண்டு சில சுரங்களை, மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. கர்நாடகத்திலிருந்து வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு இரும்பு தாதுக்களை ஏற்றுமதி செய்ய இருந்த தடையை நீக்க வேண்டும் எனக் கோரி ஏற்றுமதியாளர்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
கர்நாடகத்தலிருந்து வெளிமாநிலங்களுக்கு இரும்பு தாதுக்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மத்திய சுரங்கத்துறை கூறியது. ஆனால் கர்நாடக அரசு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. இந்த மனுவில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது
AAP: kejriwal: bjp: ‘என் ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவிடம் ரூ.800 கோடி எப்படி வந்தது?’ கெஜ்ரிவால் கேள்வி
ராஜஸ்தான் சுரங்க குத்தகை வழக்கு
ராஜஸ்தானில் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை பயன்படுத்தலாம் என்றஉ ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவில் இன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளிக்கிறது.
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்-ஐ தகுதி நீக்கம் செய்ய அம்மாநில ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை!
சுண்ணாம்புக்கற்களை தொடர்ந்து வெட்டி எடுப்பதால், ஜோகத் ஏரி வறண்டுபோகிறது, அந்தபகுதி சுற்றுச்சூழல் மோசமாக பாதிக்கப்படுகிறது. ஏறக்குறைய 20 ஆண்டுகளாக அப்பகுதி வறண்டு கிடக்கிறது என்று ராஜஸ்தான் அரசு கூறியுள்ளது
திவால் சட்ட விதிமுறைகள் தொடர்பாக தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.