நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடர்: பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்!

நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடரில் மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்

Sonia gandhi writes letter to pm modi regarding parliament special session smp

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தொடரில், சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் சட்ட மசோதா, இந்தியாவின் பெயரை “பாரத குடியரசு” என மாற்றம் செய்யும் மசோதா ஆகியவற்றை ஆளும் பாஜக அரசு தாக்கல் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தில் உடனடி முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நேற்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் பின்வரும் பிரச்சனைகளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

1. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வளர்ந்து வரும் வேலையில்லா திண்டாட்டம், ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பு மற்றும் MSME நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல்.


2. விவசாயிகள் மற்றும் உழவர் அமைப்புகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் அவர்களால் எழுப்பப்பட்ட இதர கோரிக்கைகள் தொடர்பாக இந்திய அரசு அளித்த உறுதிமொழியை செயல்படுத்துதல்.


3. அதானி குழுமத்தின் பரிவர்த்தனைகளில் செய்யப்பட்ட முறைகேடுகள் தொடர்பாக வெளிவந்திருக்கும்  உண்மைகளை விசாரிக்க கூட்டு பாராளுமன்ற குழு ( JPC)  அமைக்கும் கோரிக்கை.


4. மணிப்பூர் மக்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் வன்முறை மற்றும் அம்மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் மற்றும் சமூக நல்லிணக்கம் முற்றாக சிதைந்து போயிருத்தல்


5. ஹரியானா போன்ற பல்வேறு மாநிலங்களில் திட்டமிட்ட முறையில் உருவாக்கப்படும் வகுப்புவாத பதற்றம்


6.  இந்தியப் பகுதிகளில் சினாவின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு. அதனால்  லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் நமது எல்லைகளில் இந்திய இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள சவால்கள்


7. சாதிவாரிக் கணக்கெடுப்பின் அவசரத் தேவை.


8. மத்திய-மாநில உறவுகளில் ஏற்படும் பாதிப்புகள்.


9. சில மாநிலங்களில் கடுமையான வெள்ளம் மற்றும் சில மாநிலங்களில் வறட்சி காரணமாக ஏற்படும் இயற்கை பேரழிவுகளின் தாக்கம்.


ஆகிய 9 பிரச்சனைகள் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன.

சனாதனம் குறித்து பேசிய உதயநிதி, ஆதரவு தெரிவித்த கர்நாடக அமைச்சர் மீதும் உத்தரப்பிரதேச போலீசார் வழக்கு பதிவு

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் எதற்காக கூட்டப்படுகிறது என்பதை இதுவரை ஆளும் பாஜக அரசு அறிவிக்காத நிலையில் இந்த சிறப்புக் கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலை இந்தக் கடிதத்தின் மூலம் எதிர்க்கட்சிகள் முன் வைத்துள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios