பாரத் ஜோடோ யாத்திரையில் சோனியா காந்தி...! தாய்க்கு ஷூ லேஸ் மாட்டி விட்ட ராகுல்.. வைரலாகும் வீடியோ

பாரத் ஜோடா யாத்திரையில் கலந்து கொண்ட சோனியா காந்தியின் காலில் இருந்த ஷூவிற்கு ராகுல் காந்தி ஷூ லேஸ் கட்டிவிட்ட காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Sonia Gandhi has participated in the ongoing Bharat Jota Yatra in Karnataka

 பாரத் ஜோடோ யாத்திரை

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.  செப். 7-ம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து நடை பயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி  12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 48 நாட்கள் 3,700 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைகிறார். இந்தநிலையில் தமிழகம் மற்றும் கேரளாவில் தனது நடை பயணத்தை முடித்த ராகுல் காந்தி கர்நாடகாவில் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். 

Indian cough syrups:இந்த கம்பெனி இருமல் டானிக் வாங்காதிங்க.! 66 குழந்தைகள் இறந்துட்டாங்க? அலறி துடிக்கும் WHO

Sonia Gandhi has participated in the ongoing Bharat Jota Yatra in Karnataka

நடை பயணத்தில் சோனியா காந்தி

 ராகுல்காந்தி நடை பயணத்தை தொடங்கிய போது காங்கிரஸ் கமிட்டி பொறுப்பு தலைவரான சோனியா காந்து மருத்து சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்தார். இந்தநிலையில் நாடு திரும்பிய அவர் ராகுல் காந்தியின் நடை பயணத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டார். இதற்காக கடந்த திங்கட் கிழமை  கர்நாடகா சென்றடைந்தார். சோனியா காந்தி கூர்க்கில் உள்ள மடிகேரிக்கு விமானம் மூலம் சென்று தனியார் ரிசார்ட்டில் தங்கினார். இதற்கிடையில், மைசூரு பகுதியில் நடை பயணத்தை முடித்துக் கொண்ட ராகுல் காந்தி, தாயார்  சோனியா காந்தியை சந்திக்க மடிகேரிக்கு சென்றார். கூர்க்கில் இரண்டு நாட்கள் அவருடன் தங்கியிருந்தார். 

போதையில் தள்ளாடும் பஞ்சாப்... பொது இடங்களில் கிசாவில் மயங்கும் பெண்கள்.. பதற வைக்கும் வீடியோ..

Sonia Gandhi has participated in the ongoing Bharat Jota Yatra in Karnataka

ஷூ லேஸ் கட்டிவிட்ட ராகுல்

இந்தநிலையில் இன்று காலை கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரையை  மீண்டும் ராகுல் காந்தி தொடங்கினார். அப்போது தனது தாயாரும் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பு தலைவருமான சோனியா காந்தியும் பங்கேற்றார். நடை பயணம் மேற்கொண்ட போது சோனியா காந்தியின் காலில் இருந்த ஷூவில் கட்டியிருந்த ஷூ லேஸ் கழன்றுள்ளது.

My fave video 😍#BharatJodoWithSoniaGandhi #BharatJodoYatra pic.twitter.com/RXrHRGJqZQ

— Lavanya Ballal (@LavanyaBallal) October 6, 2022

 

இதனை கவனித்த ராகுல் காந்தி தனது தாயாருக்கு தனது கையால் ஷூ லேஸ் கட்டி விட்டார். இந்த காட்சியை அங்கிருந்தவர்களால் படம் பிடித்து சமூக வலை தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்

கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை; தனது தாய் சோனியா காந்தியை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றிய ராகுல் காந்தி!!

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios