போதையில் தள்ளாடும் பஞ்சாப்... பொது இடங்களில் கிசாவில் மயங்கும் பெண்கள்.. பதற வைக்கும் வீடியோ..
இந்தியாவிலேயே நாளுக்கு நாள் போதை பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை பஞ்சாபில் பன்மடகு அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மாநில அரசும், காவல் துறையும் போதிய நடவடிக்கை எடுக்காதது இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியாவிலேயே நாளுக்கு நாள் போதை பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை பஞ்சாபில் பன்மடகு அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மாநில அரசும், காவல் துறையும் போதிய நடவடிக்கை எடுக்காதது இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போதைப்பொருள் பழக்கம் என்பது பஞ்சாப் மாநிலத்தில் பெரும் துயரமாக மாறியுள்ளது. பாகிஸ்தானுடன் எல்லையை ஒட்டி உள்ள பஞ்சாப் மாநிலம், அந்நாட்டுடன் சுமார் 553 கிலோமீட்டர் தூர எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இதே வேலையில் ஆப்கனிஸ்தானில் இருந்து ஓபியேட் போதைப்பொருள் கடத்தலுக்கான மையமாகவும் கடந்த பல ஆண்டுகளால பஞ்சாப் இருந்து வருகிறது. இத்தகவலை ஐக்கிய நாடுகள் போதைப் பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அமைப்பு அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்; பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்கு என்று பதில் சொல்லும் அமைச்சர்.! இறங்கி அடிக்கும் ஆர்.பி உதயகுமார்
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் எல்லையை ஒட்டி இருப்பதால் போதை பொருட்கள் மிக எளிதில் பஞ்சப் மாநிலத்திற்கு கடத்தப்படுகிறது. ஓபியம், ஹெர்ராயில், பாப்பி உமி, கஞ்சா உள்ளிட்ட அடி போதைதரும் வஸ்துக்கள் பஞ்சாப் மாநிலத்தில் அளவுக்கு அதிகமாக விநியோகிக்கப்படுகிறது. நாட்டிலேயே அதிகம் போதைப் பொருள் பயன்படுத்தும் இடமாக உத்திரப்பிரதேசம் உள்ள நிலையில், அதற்கு அடுத்தபடியாக பஞ்டாப் இருந்து வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டில் நாட்டின் போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட மாநிலங்களில் இரண்டாவதாக அதிக வழக்குகள் பதிவுசெய்த மாநிலமாக பஞ்சாப்தான்.
இதையும் படியுங்கள்; கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை; தனது தாய் சோனியா காந்தியை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றிய ராகுல் காந்தி!!
போதைப் பொருள் என்பது பஞ்சாப்பியர்களின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்ததாக உள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி கட்சிகள் போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளன. ஆனால் இதுவரையில் அது போன்ற எந்த நடவடிக்கைகள் இல்லை என மக்கள் புலம்புகின்றனர். மறுபுறம் மாநிலத்தின் போதைப் பொருள் கடத்தலுக்கு காவல்துறை உடந்தையாக இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே நிமிடத்திற்கு 6 பேர் போதையால் இறப்பதாகவும் அதில், 18 சதவீதம் பேர் தற்கொலை முடிவை எடுப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிலும் கடந்த 20 ஆண்டுகளில் போதைக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து இருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 5 மடங்கு அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாகவும் அதில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலம் இளைஞர்கள் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. தற்போது அங்கே ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது, ஆனால் இதுவரையிலும் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் சண்டிகரில், சாலையில் நடக்க முடியாத நிலையில் ஒரு இடத்தில் பெண் ஒருவர் போதையில் நின்று கொண்டிருந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் மக்பூல்புராவில் இந்த சம்பவம் நடந்தது. பஞ்சாப் மாநிலம் போதைப்பொருள் கொடிகட்டிப் பறப்பதை இந்த வீடியோ நாட்டிற்கு அம்பலப்படுத்தியது. தற்போது இதேபோன்ற ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பஞ்சாப் மாநிலம் கபர்தலாவில் ஒரு இளம்பெண் மருத்துவமனையின் வெளியே போதையில் அலங்கோலமாக படுத்திருக்கும் வீடியோதான் அது.
அவரது கணவர் ஏற்கனவே போதைக்கு அடிமையாக குற்ற வழக்கு ஒன்றில் சிறையில் இருந்து வருகிறார் என்றும், இந்நிலையில் இந்த இளம்பெண் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சாலைகளில் நின்று போதைப் பொருளை விற்பவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில்தான் போதை தலைக்கேறிய நிலையில் தறிகெட்டு பொது இடத்தில் மயங்கி கிடப்பதையும் இந்த வீடியோவில் காணமுடிகிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ராணா பிரதாப் சிங் நான்காவது முறையாக எம்எல்ஏவாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. பஞ்சாப்பில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் போதைக்கு அடிமையாகி வருவது இதுபோன்ற வீடியோக்களை மூலம் அம்பலமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.